எனக்கு இன்னும் கல்யாண வயது வரல... வதந்தி பரப்பியவர்களை சுளுக்கெடுத்த சுல்தான் நாயகி
சென்னை : தனக்கு இன்னும் கல்யாண வயது வரவில்லை என்றும், அதனால் இப்போதே அதை பற்றி யோசிக்க முடியாது என்றும் கூறி வதந்தி பரப்பியவர்களுக்கு செம நோஸ் கட் கொடுக்கும் வகையில் பதிலளித்துள்ளார் சுல்தான், புஷ்பா படங்களின் நாயகி ராஷ்மிகா மந்தனா.
தெலுங்கில் கடந்த சில ஆண்டுகளாக பிரபலமான நடிகையாக இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா, புஷ்பா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பான் இந்தியன் நடிகையாகி விட்டார். அதுவும் அல்லு அர்ஜுன், ராஷ்மிகாவின் காம்போ ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால் புஷ்பா 2 எப்போது வரும், இந்த காம்போ மற்றொரு முறை இணையாதா என கேட்டு வருகின்றனர்.
புஷ்பா படத்தை தொடர்ந்து தற்போது ராஷ்மிகா, சித்தார்த் மல்கோத்ராவிற்கு ஜோடியாக மிஷன் மஜ்னு, அமிதாப் பச்சனுடன் குட் பை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு மேலும் பல படங்களில் நடிக்க ராஷ்மிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

விஜய்யுடன் டேட்டிங் சென்ற ராஷ்மிகா
கடந்த சில நாட்களாகவே நடிகர் விஜய் தேவரகொண்டோ மற்றும் ராஷ்மிகா டேட்டிங் போய் வருவதாக தகவல் பரவி வருகிறது. இவர்கள் இருவரும் மும்பையில் ஜிமிற்கு சேர்ந்து போவது, ஐதராபாத்தில் பல இடங்களில் சேர்ந்து சுற்றுவது, கோவாவில் ஒன்றாக தங்குவது, டின்னர் செல்வது என இருந்து வந்தனர். இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் பரவியது.

நாங்க நல்ல ஃபிரண்ட்ஸ்
ஆனால் இந்த வதந்திகளை இருவருமே மறுத்தனர். தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறி வந்தனர். வதந்திகள் பற்றி இதுவரை பெரிதாக எதுவும் ரியாக்ட் செய்யாத நிலையில் முதல் முறையாக தனது திருமண பிளான் பற்றி ஓப்பனாக பேட்டி ஒன்றில் கூறி உள்ளார் ராஷ்மிகா. இவரது பதில் பலரையும் குழப்பமடைய வைத்துள்ளது.

லவ்வை விளக்க முடியாது
இந்தியா டுடேவிற்கு பேட்டி அளித்த ராஷ்மிகா, என்னை பொறுத்தவரை காதல் என்பது இருவர், ஒருவருக்கு ஒருவர் கொடுக்கு மரியாதை, நேரம், உங்களை பாதுகாப்பாக உணர வைப்பது. லவ்ன்னா என்னன்னு விரிவாக விவரித்து சொல்வது மிக கடினம். ஏன்னா லவ் என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. லவ் என்பது இரு தரப்பிலும் இருக்க வேண்டும். ஒருவர் மட்டும் செய்வது அல்ல.

எனக்கு கல்யாண வயசு வரல
திருமணமா...நான் அதை பற்றி யோசிக்கவே இல்லை. எனக்கு இப்போ ரொம்ப சின்ன வயசு. இன்னும் கல்யாண வயசு வரல. அதை பற்றிய எண்ணமே எனக்கு இல்லை. இருந்தாலும் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். யார் பாதுகாப்பாக, நிம்மதியாக உணர செய்கிறாரோ அவருடன் தான் என் திருமணம் என்றார். விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து வதந்தி பரப்பியவர்களுக்கு இது செம நோஸ் கட்டாக அமைந்துள்ளது.
Recommended Video

என்ன சொல்ல வர்றார்
அதே சமயம் இவர் காதல் இருக்கு என்கிறாரா அல்லது இல்லை என்கிறாரா என மற்றவர்கள் குழப்பமடைந்துள்ளனர். இவர் என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லையே என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











