ப்ளீஸ்..பொறுமையை சோதிக்காதீங்க..மனமுடைந்த ராஷ்மிகா..நெகட்டிவ் ட்ரோலுக்கு பதிலடி!

சென்னை : நடிகை ராஷ்மிகா மந்தனா, தன்னை மோசமாக விமர்சிக்கும் நெட்டிசன்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனா, அவரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டார்.

இருவரும் காதலிக்கவில்லை, நண்பர்கள் தான் என பல முறை கூறினாலும், ராஷ்மிகா பற்றி தொடர்ந்து விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது.

தொந்தரவு செய்கிறார்கள்

தொந்தரவு செய்கிறார்கள்

தொடர்ந்து வரும் விமர்சனங்களால் மனம் நொந்துபோன ராஷ்மிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரோல் செய்பவர்களுக்கு கடுமையாக பதிலளித்துள்ளார். அதில், கடந்த சில நாட்களாக, வாரங்கள் இல்லை, மாதங்கள் இல்லை, பல ஆண்டுகளாக சிலர என்னைத் தொந்தரவு செய்கின்றனர். அவர்களைப் பற்றி பேச வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன்.

சிக்கலான வாழ்க்கை

சிக்கலான வாழ்க்கை

இதை நான் பல வருடங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். ஆனால், தாமதமாக இப்போது இதை செய்கிறேன். நான் என் சினிமா பயணத்தை தொடங்கியதிலிருந்து நிறைய வெறுப்புகளை சந்தித்து இருக்கிறேன். நான் தேர்ந்தெடுத்துள்ள இந்த வாழ்க்கை மிகவும் சிக்கலானது என்பது எனக்குத் தெரியும். அங்குள்ள ஒவ்வொருவருக்கும் என்னை பிடிக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்றாலும் விமர்சிக்காமல் இருக்கலாம்.

மனம் உடைந்து விடுகிறது

மனம் உடைந்து விடுகிறது

உங்களை மகிழ்விப்பதற்காக நான் இந்த வேலைகளைச் செய்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். என் நடிப்பின் மூலம் உங்கள் மகிழ்ச்சியில் நான் அக்கறை காட்டுகிறேன். நீங்கள் பெருமைப்படக்கூடிய விஷயங்களை செய்ய என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். நான் சொல்லாத, செய்யாத விஷயத்தை வைத்து கேலி செய்யப்படும் போதும் மனம் உடைந்து சோர்ந்து விடுகிறேன்.

பொறுமையை சோதிக்காதீங்க

பொறுமையை சோதிக்காதீங்க

இன்டர்வியூவில் நான் பேசிய சில விஷயங்கள் எனக்கு எதிராக மாறி இணையத்தில் தவறான செய்தியாக பரவி வருகிறது. இது எனது சினிமா வாழ்க்கையும், என் உறவுகளையும் பாதிக்கிறது. விமர்சனம் ஒருவரை மேம்படுத்தும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், சில விமர்சனம் மோசமான. வெறுப்புடன் இருக்கிறது. இத்தனை நாள் பொறுமையாக இருந்துவிட்டேன். இனியும் பொறுமையை சோதிக்காதீங்க.

அன்பாக இருங்கள்

அன்பாக இருங்கள்

உங்களின் அன்பும் ஆதரவும் தான் இதை வெளியில் சொல்லும் தைரியத்தை எனக்கு கொடுத்துள்ளது. நான் தொடர்ந்து கடினமாக உழைத்து உங்களுக்காக சிறப்பாக உழைப்பேன். ஏன் என்றால் உங்களை மகிழ்விப்பது தான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரிடமும் அன்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ராஷ்மிகாவின் தீவிர ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X