ஓராண்டில் இத்தனை பங்களாவா....அசர வைக்கும் சுல்தான் நாயகி

ஐதராபாத் : தனது அழகாலும், அழகிய நடிப்பாலும் ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் மட்டுமல்ல தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் ராஷ்மிகா.

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ராஷ்மிகா, தமிழில் முதல் படமான சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். பக்கா கிராமத்து பொண்ணாக வந்து, பக்கத்து வீட்டு பெண் உணர்வை அனைவரின் மனதிலும் ஏற்படுத்தி விட்டார் ராஷ்மிகா.

பாலிவுட்டில் 4 படங்கள்

பாலிவுட்டில் 4 படங்கள்

தென்னிந்திய மொழிகளில் பிரபலமானதை அடுத்து பாலிவுட்டிலும் தடம் பதித்த ராஷ்மிகா,ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். Goodbye, Mission Manju படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா, மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

புஷ்பாவிற்காக காத்திருக்கும் ராஷ்மிகா

புஷ்பாவிற்காக காத்திருக்கும் ராஷ்மிகா

அடுத்ததாக தான் நடித்துள்ள பான் இந்தியன் படமான புஷ்பா படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார் ராஷ்மிகா. இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் ஏற்கனவே வெளியிடப்பட்டு, செம ஹிட்டாகி உள்ள நிலையில், இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. சுகுமாறன் இயக்கி உள்ள இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் டிசம்பர் 17 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் பங்களா

ஐதராபாத்தில் பங்களா

ராஷ்மிகா தனது பெற்றொருடன் கர்நாடகாவில் உள்ள பங்களாவில் வாழ்ந்து வருகிறார். குடுகு பகுதியில் உள்ள இந்த வீட்டில் தான் பல காலமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு தெலுங்கில் நடிக்க அதிக வாய்ப்புக்கள் கிடைக்க துவங்கியதால் 2020 ல் ஐதராபாத்தில் Gachibowli பகுதியில் புதிய பங்களா ஒன்று வாங்கினார். அங்கு தங்கி, சினிமாவில் நடித்து வந்தார்.

மும்பையில் புது வீடு

மும்பையில் புது வீடு

அதன் பிறகு பாலிவுட் படங்களில் வாய்ப்பு கிடைத்ததால் மும்பையில் அப்பார்மென்ட்டில் புதிய வீடு ஒன்றை வாங்கினார். இந்த வீட்டில் தனது செல்ல நாய்க்குட்டியுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை ராஷ்மிகா சோஷியல் மீடியாவில் வெளியிட்டார். இந்த ஃபோட்டோக்கள் வைரலாகின. கடந்த சில மாதங்களாக மும்பையில் உள்ள வீட்டில் தான் தங்கி, பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

Recommended Video

சூப்பர்ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம் |Actress Rashmika Mandanna Interview|Filmibeat Tamil
கோவாவில் சொகுசு பங்களா

கோவாவில் சொகுசு பங்களா

இந்நிலையில் தற்போது நான்காவதாக கோவாவில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கி உள்ளார் ராஷ்மிகா. இந்த வீட்டின் ஃபோட்டோக்களை தற்போது பகிர்ந்துள்ளார் ராஷ்மிகா. வீட்டிற்கு வெளியே நீச்சல்குளம், புத்தர் சிலை போன்றவை உள்ள ஃபோட்டோக்களை அவர் பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோக்கள் தற்போது தாறுமாறாக வைரலாகி வருகிறது.

மூன்றாவது வீடு

மூன்றாவது வீடு

ராஷ்மிகாவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 2021 ம் ஆண்டில் இவர் வாங்கி உள்ள மூன்றாவது சொகுசு பங்களா இதுவாகும். வந்து தங்கி, நடிப்பதற்கு வசதியாக இருக்கும் என ஒவ்வொரு ஊரிலும் வீடு வாங்கி வரும் ராஷ்மிகா, கோவாவில் வீடு வாங்க என்ன காரணம் என சினிமா வட்டாரங்களில் கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X