»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

நல்ல பட வாய்ப்புக்களுக்காக பொறுத்துப் பொறுத்துப் பார்த்து ஏமாந்து போன ரதி மனதைத் தேற்றிக் கொண்டு,பிற நடிகைகள் பாணியில் கவர்ச்சிக்குத் தாவிவிட்டார்.

சொல்ல மறந்த கதையில் நல்ல நடிகை என்ற பெயர் கிடைத்தாலும் டப்பிங் பேசவே தொடர்ந்து வாய்ப்புக்கள்வந்தன. இடையில் ஆஞ்சநேயாவில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடினார்.

அதைத் தொடர்ந்து சிங்காரச் சென்னைஎன்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படப் பிடிப்பு ஜவ்வாக இழுத்துக் கொண்டே போனது.

இந் நிலையில் அடிதடி படத்தில் ஒப்பந்தமானார். இதில் சத்யராஜ் நடித்தாலும் நல்லவேளையாக அவருக்குஜோடியாக ரதியைப் போடவில்லை. அப்பாசுக்கு ஜோடியாக்கினார்கள்.

ஆனால், அதில் அளவுக்கு அதிகமாகஎக்ஸ்போஸ் செய்யச் சொன்னதால் தயாரிப்பாளருடன் சண்டை போட்டுவிட்டு விலகினார் ரதி.

வீட்டில் மீண்டும் நல்ல கேரக்டர் ரோலுக்காகக் காத்திருந்தும் ஒருவரும் சீண்டவில்லை. இதனால் கன்னட உலகில்போய் முயற்சி செய்தார்.

பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் இவர் ஒரு தமிழச்சி என்பதால் கன்னட சினி உலகில் இவரைஆதரிக்கவில்லை. பாய்பிரண்ட் என்ற ஒரு படம் மட்டுமே கிடைத்தது. அதிலும் இவருக்கு முக்கிய வேடம்ஏதுமில்லை.

இதனால் மனமொடிந்து போய் சென்னை வந்த ரதி மீண்டும் அடிதடி தயாரிப்பாளரிடமே போய் சமாதானம் பேச,மீண்டும் படத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.

ஆனால், எவ்வளவு சொன்னாலும் அவ்வளவு கவர்ச்சியாய்நடிக்கனும் என்ற முக்கியமான கண்டிசனுடன். அதற்குத் தலையாட்டிய ரதி புகுந்து விளையாடி இருக்கிறார்.

ரதியின் ஒத்துழைப்பைப் பார்த்து சம்பளத்தைக் கூட கூட்டித் தந்துவிட்டார்களாம். அடிதடியில் கவர்ச்சிகாட்டியதால் சிங்காரச் சென்னை படத்திலும் கவர்ச்சியாட்டம் போடச் சொல்லிவிட்டார்கள். தலைக்கு மேல்வெள்ளம் போய்விட்டது. இனி ஜான் போனா என்ன முழம் போனா என்ற சிந்தாந்துக்கு மாறிய ரதி அதிலும்ஏகத்துக்கும் கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.

இனியாவது ரதிக்கு நிறைய சான்ஸ் வருகிறதா பார்ப்போம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil