»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

"சொல்ல மறந்த கதை" நாயகியாக மக்கள் மனதில் இடம் பிடித்த பெங்களூர் தமிழ் குயில் ரதிதான் இப்போதைக்கு தமிழில்குறைந்த சம்பளத்திற்கு நடிக்கும் ஒரே நடிகையாம்.

முன்னணி நடிகைகளான ஸ்னேகா, ஜோதிகா, சிம்ரன் ஆகியோர் எல்லாம் லட்சக் கணக்கில் கேட்டுக் கொண்டிருக்க, ரதி அப்படிக்கேட்பதில்லை.

கதை நன்றாக இருந்தால் போதும். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வேன் என்று தாராளமாகக் கூறிவருகிறாராம். இதனால் குறைந்த சம்பளத்திற்கே நமது தயாரிப்பாளர்கள் ரதியை புக் செய்து வருகிறார்களாம்.

இப்போதைக்கு நிறைய படங்களில் நடித்து நல்ல இடத்தைப் பிடித்துவிட்டால் அதற்குப் பிறகு சம்பளத்தை ஏற்றிக் கொள்ளலாம்என்பது ரதியின் திட்டமாம்.

பி.கு.: ரதி நன்றாகப் பாடுவார். அதற்காகத்தான் அவரைக் "குயில்" என்று குறிப்பிட்டுள்ளோம்.

அபிராமியின் அடுத்த ஸ்டாப்...

மலையாளத்தில் அறிமுகமாகி, தமிழில் கொஞ்ச படங்களில் நடித்து முடித்து, தெலுங்கிலும் தலைகாட்டி விட்டு, எங்குமே நிரந்தர இடம்கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த அபிராமி இப்போது கன்னடத்தில் மோதிப் பார்த்து வருகிறார்.

பெங்களூர் இந்திரா நகரில் தனியாக வீடு எடுத்துத் தங்கி கன்னடப் பட வாய்ப்புகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார் அபிராமி.

இதற்குப் பலனாக சில படங்கள் வந்துள்ளதாம். அதில் முக்கியமானதாக அவர் கருதுவது, தமிழில் பலப் பல ஆண்டுகளுக்கு முன்புவெளிவந்து பரபரப்பாக ஓடிய "ரத்தக் கண்ணீர்" படத்தின் கன்னட ரீமேக் படம்.

இந்தப் படத்தை இயக்கும் உபேந்திராதான் எம்.ஆர். ராதா நடித்த வேடத்தில் நடிக்கிறார்.

அப்ப அபிராமிதான் "அரிக்குதடி காந்தா"வா?

செட்டிலாகும் செளந்தர்யா

செளந்தர்யா விரைவில் கல்யாணம் பண்ணப் போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

கல்யாணத்திற்குப் பிறகு பயன்படுத்திக் கொள்வதற்காக புது வீடு, புது கார் என பெங்களூரில் எல்லா ஏற்படுகளும் தற்போதுபடு ஜோராகத் தயாராகி விட்டன.

கையில் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்து விட்டு மணக் கோலம் பூணப் போகிறார் செளந்தர்யா. அப்புறம்??? பெங்களூரில்"செட்டில்" ஆகிறாராம், வேறு என்ன?

Read more about: actors, actress, cinema, mumtaj, tamilnadu
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil