»   »  ரவளி கல்யாணம் ஓவர்!

ரவளி கல்யாணம் ஓவர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்துள்ள நடிகை ரவளிக்கு ஹைதராபாத்தில் நேற்று சிறப்பாக திருமணம் நடந்தது.

சீமைப்பசு என்று ரசிகர்களாலும், நடிகர் பார்த்திபனாலும் பாசத்தோடு அழைக்கப்பட்டவர் ரவளி. திருமூர்த்தி படத்தில் விஜயகாந்த்துடன் இணைந்து நடித்து நடிகையாக அறிமுகமானார்.

முதல் படம் முதல் கடைசியாக நடித்த படம் வரை அன்லிமிட்டெட் கிளாமரில் ரசிகர்களை கிறங்கடித்த ரவளி பின்னர் தமிழில் வாய்ப்பிழந்து தனது தாய்மொழியான தெலுங்குக்குப் போனார்.

அங்கும் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறையவே வீட்டோடு இருந்து வந்தார். அப்போதெல்லாம் அந்த புரோடியூசருடன் கல்யாணம், இவருடன் கல்யாணம் என ரவளியைப் பற்றி புரளிகள் வந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் அவருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் பொறியாளர் நீல கிருஷ்ணனுக்கும் திருமணம் நிச்சயமானது.

தனது திருமண அழைப்பிதழை சென்னைக்கு வந்து திரையுலக நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு நேரில் கொடுத்து அனைவரையும் அன்புடன் அழைத்தார்.

ரவளி, நீலகிருஷ்ணன் திருமணம் ஹைதராபாத் ஹைடெக் சிட்டியில் விமரிசையாக நடந்தது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil