»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரவளி!

தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராகவேந்திர ராவின் பெலிசந்தாதி திரைப்படத்தில் அறிமுகமாகி அங்கு தாக்குப்பிடிக்க முடியாமல், ஒட்டுமொத்த தெலுங்கு ரசிகர்களே அவரை மறந்து விட்ட நிலையில் அங்கிருந்து கன்னடப்படஉலகிற்கு ஹைஜம்ப் ஆனார்.

அங்கிருந்து தமிழுக்கு வந்தார். தமிழ், கன்னடப் பட உலகில் தன்னை ஸ்டெடி பண்ணிக் கொள்ள ரொம்பவேசிரமப்பட்டார் ரவளி. அங்கும், இங்கும் கொஞ்ச காலம் கிடைத்த கேரக்டரில் நடித்தார். ஜூட் விட்டார். தனது சொந்த மாநிலமான ஆந்திராவுக்குப் பறந்துவிடத் திட்டமிட்டுள்ளார்.

திருமணம், காதல் இதிலெல்லாம் இப்போதைக்கு விருப்பமில்லையாம். இதோ ரவளி மனம் திறக்கிறார்.

சினிமா இன்டஸ்ட்ரில உங்களுக்கு தோல்வி மேல் தோல்வி. ஹிட் படங்களே இல்லையே? (படங்களே இல்ல அது வேற விஷயம்)

என்னன்னு தெரியல. சில தெலுங்கு, தமிழ், கன்னடப் படங்கள்ல நடிச்சேன். ஆனா இப்போ படங்களே இல்ல.என்ன காரணம்னு தெரியல. தெலுங்குல ரெண்டு வருஷமா சுத்தமா படமே இல்ல. ரசிகர்களே என்னமறந்துட்டாங்க (சபாஷ் உண்மையை ஒப்புக் கொள்கிறார்)

ரொம்ப வெயிட் போட்டுட்டீங்கன்னு சொல்றாங்க? ஒரு வேளை அது காரணமா இருக்குமோ?

எப்போ நான் ஒல்லியா இருந்தேன். இப்போ ரொம்ப வெயிட் போட்டுட்டேன்னு சொல்றதுக்கு? நான்அறிமுகமான பெலிசந்தாதி படத்தில எப்படியிருந்தேனோ அப்படியேதான் இருக்கேன்.

ஆனா, இப்போ என்ன பாக்கறவங்க நான் ரொம்ப ஒல்லியாகி விட்டேன்னு சொல்றாங்க.

உங்க மேனி நிறமும் (கருப்பு) பட வாய்ப்புக்கள் குறைவதற்குக் காரணம்ன்னு சொல்றாங்களே?

நான் ரொம்ப கருப்பு இல்ல. நார்மல் தெலுங்கு பெண் போல் தான் நான் இருக்கிறேன். மும்பை பொண்ணுங்கமாதிரி பளீர் வெள்ளை நிறத்துல நான் இல்லாமல் இருக்கலாம்.

ஆனாலும், ரோஜா, சாவித்ரியை விட நான் பெட்டர் கலர். மேக்கப்ல இருக்கும் போது எப்படி கருப்பு,வெள்ளைன்னு பாக்க முடியும்?

நீங்க தெலுங்குப் பெண்ணாக இருந்தும், தெலுங்குப் படவுலகம் உங்களை நிராகரிக்கிறது என்று பீல் பண்றீங்களா ரவளி?

கண்டிப்பா இல்லை. என்னோட பிரச்சனை என்னன்னா எனக்கு நல்ல பட வாய்ப்புக்கள் இல்ல அவ்ளோதான்.இப்போ நான் ஒரு நல்ல மானேஜரை நியமித்திருக்கிறேன். எனக்கு நல்ல பட வாய்ப்புக்கள் கிடைக்கும் என்றுநம்புகிறேன்.

திரையுலகில் உங்களுக்குன்னு தெளிவான ஐடென்டிடி இல்லையே? இதனால் நீங்கள் வருத்தப்படறதில்லையா?

இல்லவேயில்லை. நாம கிளாமர் ரோலிலோ அல்லது கதாநாயகி ரோலிலோ நடிச்சா அந்த முத்திரை விழுந்துடும்.தொடர்ந்து சினிமாவுல அதே மாதிரி ரோல்ஸ் தான் கொடுப்பாங்க. இப்போ, ரெண்டு டைப் ரோல்சும் கிடைக்குது.ஒரு குறிப்பிட்ட ரோல்லதான் நடிக்க முடியும்ங்கறதுல எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்ல.

மக்கள் மத்தியில எந்த விதமான நடிகையா இருக்கணும்ன்னு விரும்பறீங்க ரவளி?

நான் நல்ல நடிகைன்னு மட்டும் பேரெடுத்தால் போதும். இப்போ ரெண்டு படங்கள்ல நடிக்கிறேன். இன்னும் சில படங்கள் கமிட் ஆகிற நிலைமைல இருக்கு.

அப்புறம் ரவளி கொஞ்சம் ஸ்வீட்டான கேள்வி! அதான், எப்போ கல்யாணம்?

இப்போ மேரேஜ் பத்தி ஐடியா இல்ல. நான் இன்னும் செட்டில் ஆகல. சினிமா பீல்டுல நல்லா ஸ்டெடியா ஆனப்புறம் தான் டும்டும் எல்லாம்.

காதல் பத்தி?

எனக்கு இதுவரை காதல் அனுபவம் இல்ல. வீணா டென்ஷன் ஆக விரும்பல. லவ் பண்ணா ஏகப்பட்ட டென்ஷன். காதல் சமாச்சாரம்ங்கறது ரெண்டுபேருக்குள்ள இருக்கற அன்டர்ஸ்டாடிங்கைப் பொறுத்தது. நான் காதல்ல விழறதா இல்ல.

உங்களோட காதலர் அல்லது கணவர் எப்படியிருக்க வேண்டும்?

ரொம்ப உயரமா, கவர்ச்சியான கண்களோட இருக்கணும்.

சினிமா பீல்டுல உள்ளவங்கள திருமணம் செய்துக்குவீங்களா?

சினிமா பீல்டுலதான் இருக்கணும்னு அவசியம் இல்ல. வேறு எந்த பீல்டா இருந்தாலும் பிரச்சனையில்ல.

Read more about: cinema glamour heroin interview ravali

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil