»   »  கண்ட இடத்தில் தொட்டார்கள், ரயிலில் சுயஇன்பம் அனுபவித்தவனை அடித்தேன்: தனுஷ் தோழி

கண்ட இடத்தில் தொட்டார்கள், ரயிலில் சுயஇன்பம் அனுபவித்தவனை அடித்தேன்: தனுஷ் தோழி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரேம் ரத்தன் தன் பாயோ பட விளம்பர நிகழ்ச்சிக்காக சென்றபோது விமான நிலையத்தில் கூட்டத்தில் நின்றவர்கள் தன்னை கண்ட இடத்தில் தொட்டதாக நடிகை ஸ்வரா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடித்த ராஞ்ஹனா படத்தில் அவரின் தோழியாக நடித்தவர் ஸ்வரா பாஸ்கர். அவர் பிரேம் ரத்தன் தன் பாயோ படத்தில் சல்மான் கானின் தங்கையாக நடித்தார்.

இந்நிலையில் அவர் பிரேம் ரத்தன் தன் பாயோ விளம்பர நிகழ்ச்சிக்காக சென்றபோது நடந்தது பற்றி கூறும்போது,

விமான நிலையம்

விமான நிலையம்

பிரேம் ரத்தன் தன் பாயோ பட விளம்பர நிகழ்ச்சிக்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்கோட் சென்றோம். விமான நிலையத்தில் நான், சல்மான் கானுடன் சென்றபோது அங்கு கூட்டம் கூடிவிட்டது. அப்போது சிலர் என்னை கண்ட இடத்தில் தொட்டார்கள்.

கார்

கார்

அனுபம் கேர் சார் தான் என்னை காப்பாற்றி காரில் ஏற்றி அனுப்பி வைத்தார். கூட்டம் என்று வந்துவிட்டால் நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை. ராஞ்ஹனா படத்தில் ஹோலி காட்சியை படமாக்கும்போது எங்களை சுற்றி 5 பையன்கள் பாதுகாப்பாக நின்றார்கள்.

அறை

அறை

ஒருமுறை டெல்லியில் புக் பஜாரில் ஒருவர் என்னை கிள்ளினார். உடனே நான் அந்த நபரை பிடித்து ஓங்கி கன்னத்தில் அறைந்துவிட்டேன். இதை அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை.

ரயில்

ரயில்

நான் மும்பைக்கு வந்த வருடம் ரயிலில் மதிய வேளையில் முதல் வகுப்பில் பயணம் செய்தேன். அந்த பெட்டியில் ஏறிய போதைப் பொருள் அடிமை ஒருவர் கூட்டம் இல்லாததை பயன்படுத்தி சுய இன்பம் அனுபவித்தார்.

அடி

அடி

அந்த ஆள் ரயிலில் சுய இன்பம் அனுபவித்ததை பார்த்த நான் பயந்துபோய் அவரை திட்டி நான் வைத்திருந்த குடையால் அடித்தேன். அவரை போலீசில் பிடித்துக் கொடுக்க அவரின் சட்டை காலரை பிடித்தேன். இதை உணர்ந்த அவர் ரயில் நின்றபோது என் கையை உதறிவிட்டு ஓடிவிட்டார் என்றார் ஸ்வரா.

English summary
Bollywood actress Swara Bhaskar said that she was groped when she landed at Rajkot airport for the promotion of Prem Ratan Dhan Payo.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil