»   »  முத்தக் காட்சியில் நடிக்க ரெடி, ஆனால் 2 கன்டிஷன்: நடிகை ராகுல் ப்ரீத் சிங்

முத்தக் காட்சியில் நடிக்க ரெடி, ஆனால் 2 கன்டிஷன்: நடிகை ராகுல் ப்ரீத் சிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: முத்தக் காட்சிகளில் நடிக்க தயார். ஆனால் அது ஆபாசமாக இருக்கக் கூடாது என்று ராகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

நாக சைதன்யா, ராகுல் ப்ரீத் சிங் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'ராரண்டோய் வேதுகா சுதஹாம்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கவர்ச்சியில் கலக்கி வரும் ராகுல் ப்ரீத் இந்த படத்தில் பாவாடை தாவணியில் வந்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

இந்நிலையில் ராகுல் ப்ரீத் செய்தியாளர்களிடம் கூறும்போது,

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

நான் பாவாடை தாவணியில் நடித்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. இதற்காக என்னை பாராட்டி வருகிறார்கள். என்னை அவர்கள் வீட்டு பெண்ணாகவே பார்க்கிறார்கள்.

சினிமா

சினிமா

சினிமா உலகில் தினம் தினம் ஏதாவது பாடம் கற்றுக் கொண்டே இருக்கிறேன். வெற்றி, தோல்வியை பற்றி நினைக்காமல் கடுமையாக உழைக்கிறேன். சினிமாவின் ஒரு அங்கம் கவர்ச்சி.

கவர்ச்சி

கவர்ச்சி

நடிகைகள் கவர்ச்சியாக வந்தால் தான் ரசிகர்களுக்கு பிடிக்கிறது. கவர்ச்சி உடையில் நடிகைகள் தேவதைகள் போன்று இருப்பார்கள். படத்தில் முத்தக் காட்சியில் நடிப்பது தவறு இல்லை.

முத்தம்

முத்தம்

முத்தக் காட்சியில் நடிக்க நான் தயாராக உள்ளேன். ஆனால் அது ஆபாசமாக இருக்கக் கூடாது. கதைக்காக முத்தக் காட்சி இருக்கலாம். ஆனால் விளம்பரத்திற்காக திணிக்கப்படும் முத்தக் காட்சிகள் இருக்கக் கூடாது. திணிக்கப்படும் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றார் ராகுல் ப்ரீத் சிங்.

English summary
Rakul Preet Singh said that she is ready to act in kissing scenes only if it necessary for the story.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil