»   »  நல்ல கேரக்டர் அமைந்தால் அப்பாவுடன் சேர்ந்து நடிப்பேன்...: சுருதிஹாசன்

நல்ல கேரக்டர் அமைந்தால் அப்பாவுடன் சேர்ந்து நடிப்பேன்...: சுருதிஹாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நல்ல கதாபாத்திரம் அமைந்தால் தன் தந்தை கமலுடன் இணைந்து நடிப்பேன் என நடிகை சுருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்-சரிகா நட்சத்திர தம்பதியின் மூத்தமகள் சுருதிஹாசன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார்.

சுருதி டிவிட்டர் வாயிலாக தனது ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-

அப்பா மாதிரியே...

அப்பா மாதிரியே...

என் தந்தையை போல் திரையுலகில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். அவரைப்போல் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படவும் ஆசைப்படுகிறேன்.

நல்ல கேரக்டர் அமைந்தால்...

நல்ல கேரக்டர் அமைந்தால்...

உங்கள் தந்தை கமல்ஹாசனுடன் இணைந்து நடிப்பீர்களா என்று பலர் என்னிடம் கேட்கின்றனர். நல்ல கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் அவரோடு சேர்ந்து நடிப்பேன்.

நடிகையானதில் மகிழ்ச்சி...

நடிகையானதில் மகிழ்ச்சி...

சினிமாவில் நடிக்க வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. நான் நடிகையாகாமல் இருந்திருந்தால் ஏரோனட்டிக்கல் என்ஜினியர் ஆகி இருப்பேன்.

கடவுள் நம்பிக்கை தான்...

கடவுள் நம்பிக்கை தான்...

எனக்கு பிடித்த உணவு சாம்பார் சாதம். அதை பார்த்தால் விட மாட்டேன். என்னுடைய பெரிய பலமே கடவுள் நம்பிக்கைதான்.

நல்ல படங்கள்...

நல்ல படங்கள்...

தொடர்ந்து நல்ல படங்களில் நடித்துக்கோண்டு இருக்கிறேன்.அவை அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

செல்வந்தன்...

செல்வந்தன்...

தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக சுருதி நடித்த ஸ்ரீமந்துடு படம் சமீபத்தில் வெளியானது. தமிழிலும் இந்த படம் செல்வந்தன் என்ற பெயரில் வந்தது.

புலி...

புலி...

சுருதி தமிழில் தற்போது விஜய் ஜோடியாக புலி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தியிலும் மூன்று படங்கள் இவரது கைவசம் உள்ளன.

English summary
Actress Shruti hassan has said that she is ready to act with his father kamal, if the character is good.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil