ராஷ்மிகா மந்தனா செம விவரமா?.. விஜய் தேவரகொண்டா ஓகே.. அந்த நடிகருடனான உறவை முறித்தது ஏன் தெரியுமா?
பெங்களூரு: ராஷ்மிகா மந்தனா இப்போது பான் இந்தியா ஹீரோயின்களில் ஒருவராஜ ஜொலித்துக்கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட நிலைமையில் அவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்துவருவதாக தகவல்கள் பரவிய சூழலில்; அவர்கள் இரண்டு பேரும் நேற்று ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க நின்றுபோன அவரது முதல் நிச்சயதார்த்தம் பற்றியும் இப்போது பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட ராஷ்மிகா மந்தனா; காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி இயக்கிய க்ரிக் பார்ட்டி என்ற படத்தில்தான் தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரக்ஷித் ஷெட்டி நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. நான்கு கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட அப்படம் மொத்தம் 50 கோடி ரூபாய்வரை வசூலித்தது. இதனால் ராஷ்மிகாவுக்கும் முதல் படத்திலேயே வெளிச்சம் கிடைத்தது.
பிஸியான ராஷ்மிகா: முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதிலும் தெலுங்கு திரையுலகத்தில் அவருக்கான மார்க்கெட் சரசரவென்று உயர்ந்தது. அதனை சரியாக அவர் பயன்படுத்திக்கொள்ளவும் செய்தார். இதனால் குறுகிய காலத்திலேயே அந்தத் திரையுலகத்தில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் அவர் அடைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பான் இந்தியா ஹீரோயின்: முக்கியமாக கடந்த சில வருடங்களில் அவரது வளர்ச்சி ஜெட் வேகத்தில் இருக்கிறது. தெலுங்கு, கன்னடம் மொழிகளில் மட்டும் நடித்துவந்த அவர் இப்போது ஒரு பான் இந்தியா ஹீரோயின். அனிமல் படத்தில் நடித்ததற்காக அவருக்கு மட்டுமே நான்கு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்ததாகவும் ஒரு பேச்சு உண்டு. அடுத்தடுத்தும் அவர் தொடர்ந்து ஹிந்தி படங்களில் கமிட்டாகியிருக்கிறார். மேலும் நேஷனல் க்ரஷ் என்றும் அழைக்கப்படுகிறார்.
விஜய் தேவரகொண்டாவுடன் நிச்சயதார்த்தம்?: சூழல் இப்படி இருக்க கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது அவருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. அதனை அவர்கள் இரண்டு பேருமே மறுக்கவில்லை. மேலும் பொது நிகழ்ச்சிகளிலும் தான் காதலில் விழுந்திருப்பதாக மறைமுகமாக கூறிவந்தார் நேஷனல் க்ரஷ். தற்போது அவர்கள் இரண்டு பேரும் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
முதல் நிச்சயதார்த்தம் ஓவர்: இந்நிலையில் அவர்களுக்கு பலரும் வாழ்த்து சொல்கிறார்கள். அதேசமயம் அவரது முதல் நிச்சயதார்த்தம் பற்றிய பேச்சும் எழுந்திருக்கிறது. க்ரிக் பார்ட்டி படத்தில் நடித்தபோது ரக்ஷித் ஷெட்டியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ராஷ்மிகா நிச்சயதார்த்தமும் செய்துகொண்டார். ஆனால் திடீரென சில காலத்திலேயே அந்த உறவிலிருந்து வெளியே வந்தார்.
என்ன காரணம்?: க்ரிக் பார்ட்டி படத்துக்கு பிறகு தனக்கு வந்த வாய்ப்புகளால் சினிமா மீது மேற்கொண்டு ஆர்வம் வந்ததால்தான் அந்த நிச்சயதார்த்தத்தை திருமணம்வரை அவர் கொண்டு செல்லவில்லையாம். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இன்னொரு தகவலும் வெளியாகியிருக்கிறது. அதாவது ரக்ஷித்துக்கும், ராஷ்மிகாவுக்கும் இடையே 7 வயது வித்தியாசம். கரியர் பீக்கில் சென்றுகொண்டிருக்கும்போது திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்பது மட்டுமின்றி; இத்தனை வயது வித்தியாசத்தோடு திருமணம் செய்தால் வாழ்க்கை சுமூகமாக அமையும் என்று அவர் யோசித்ததாகவும்; திருமணத்துக்கு பிறகு நடிப்பதற்கு ரக்ஷித்தின் குடும்பம் நோ சொன்னதால்தான் அந்த உறவிலிருந்து ராஷ்மிகா வெளியேறிவிட்டதாகவும் சொல்கிறார்கள் சாண்டல்வுட் திரைத்துறையினர்.


Click it and Unblock the Notifications











