»   »  காசு தேத்தும் ரீமா

காசு தேத்தும் ரீமா

Subscribe to Oneindia Tamil

சினிமாவில் கதாநாயகிகளின் செல்வாக்கு, ஈசல் பூச்சிகளின் வாழ்நாளை விடக் குறுகியது என்பதை நன்றாகவேபுரிந்து வைத்திருக்கிறார் ரீமா சென்.

அதனால் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி பல வழிகளில் பணத்தைக் குவித்து வருகிறார்.

தாராளத்துக்கு நோ சொல்லாதவர் என்பதால் தெலுங்கில் இவருக்கு எப்போதும் மவுசு. தமிழில் அதிகம்வாய்ப்பில்லாமல் இருந்தவர், செல்லமே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட நேரம் இப்போது கையில் 3, 4படங்களை வைத்திருக்கிறார்.

படங்களை ஒப்புக் கொள்ளும்போது சில நடிகைகளைப் போல, கதையில் முக்கியத்துவம் வேண்டும், கவர்ச்சியாகநடிக்க மாட்டேன் என்றெல்லாம் ரீமா கண்டிஷன் போடுவதில்லை. கேட்ட சம்பளம் கிடைக்குமா என்றுதான்பார்க்கிறார். புக் பண்ண வரும் தயாரிப்பாளர்களிடம் 25 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்கிறார்.

பின்பு அப்படி இப்படி என்று பேசி, இருபதுக்கு ஒத்துக் கொள்கிறார். கதாநாயகியாக நடிப்பதற்கு 20 என்றால், ஒருஆட்டத்துக்கு 12 லட்சம் கேட்கிறார். துணிக்கடை, நகைக் கடை திறப்பு விழா என்றால் 5 லட்சம் எனஒவ்வொன்றுக்கும் ரேட் வைத்துள்ளார். இந்த ரேட் எல்லாம் தமிழ்நாட்டுக்கு மட்டும்தான்.

ஆந்திரா பார்டருக்குப் போய் விட்டால், இவை எல்லாம் இன்னும் கொஞ்சம் கூடிவிடுகின்றன. இப்போதைக்குதென்னிந்தியாவில் இவர் போல் கணக்கு போட்டு சம்பாதிக்கும் நடிகை வேறு யாருமே இல்லை என்றுகோடம்பாக்கத்தில் சொல்கிறார்கள்.

காசு இவ்வளவு கேட்டாலும், ரீமா சென்னிடம் கவர்ச்சி, நடிப்பு, டான்ஸ் என கேட்டது எல்லாம் கிடைக்கும்என்பதால் தயாரிப்பாளர்கள் தருவதற்கு ரெடியாகவே இருக்கிறார்கள். இப்போது செல்லமே, கிரி படங்களில்நடித்து வரும் ரீமா, உனக்காகவே நான், கொல்லிமலை சிங்கம் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வாய்ப்பே இல்லாமல் இருந்தவருக்கு இப்போது படங்கள் குவிவதன் காரணம் செல்லமே படம் தானாம்.படத்தில் இவர் காட்டியிருக்கும் கணக்கு வழக்கில்லாத நெருக்கத்துக்கு கோலிவுட்டே ஆடிப் போயிருக்கிறது.

படத்தில் கதாநாயகனாக நடிக்கும் விஷால், ரீமாவுடன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறியிருக்கிறார்.இவர் பட அதிபர் ஜி.கே. ரெட்டியின் மகன். நடிகர் அர்ஜூன் இயக்கிய வேதம், ஏழுமலை ஆகிய படங்களில்உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

கதாநாயகன் வாய்ப்பு கிடைத்ததும், கூத்துப்பட்டறையில் இரண்டு மாதங்கள் நடிப்புப் பயிற்சி பெற்றிருக்கிறார்.ஆனால் அந்தப் பயிற்சியெல்லாம் ரீமாவுடன் நடிப்பதற்கு உபயோகப்படவில்லை. பாதிப் படம் முடிந்த பின்பே,கூச்சம் குறைந்து சகஜ நிலைக்கு வந்திருக்கிறார். அந்தளவுக்கு ரீமா படத்தில் ஆட்டம் போட்டிருக்கிறார்.

உனக்காகவே நான் படத்தில் ரீமாவுக்கு ஜோடி சசிகாந்த் என்ற புதுமுகம்தான் ஹீரோ. ஹீரோயின் ரீமாதான்என்றாலும், ரம்பாவும் படத்தில் இருக்கிறார்.

ஜீவனுள்ள காதலை மையமாக வைத்து, ஒரு நகரில் நடக்கும்சம்பவங்களை வித்தியாசமான கோணத்தில் சொல்லப் போகிறார்களாம்.

சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்க தெலுங்கிலும் தமிழிலும் உருவாகும் "கொல்லிமல்லை சிங்கம் என்ற படத்திலும்ரீமா நடிக்கிறார். இந்தப் படத்தில் இந்தி நடிகை நம்ரதா ஷிரோத்கரும் இருக்கிறார் என்பதால், கவர்ச்சியில்இருவருக்கும் மிகப் பெரிய போட்டியே நடக்கிறது.

கொல்லி மலைக் காட்டில் 72 வருடங்களுக்கு ஒரு முறை கிடைக்கும் அபூர்வ சக்தியை அடைய வெளிநாட்டுக்கும்பல் ஒன்று முயல்கிறது. அதை சிரஞ்சீவி எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் கதையாம்.

இந்த விட்டலாச்சார்யா காலக் கதைகளை தெலுங்கு சினிமாவினர் விடவே மாட்டார்களா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil