»   »  கசடற கற்கும் ரீமா

கசடற கற்கும் ரீமா

Subscribe to Oneindia Tamil

காலம் கடந்த ஞானோதயமாக இப்போது தமிழ் கற்க ஆரம்பித்துள்ளார் ரீமா சென்.

மின்னலே மூலம் மின்னலென தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ரீமா சென். முதல் படத்தில் அழகான கிளாமருடன் வந்து போன ரீமா, அடுத்தடுத்த படங்களில் கில்லி கிளாமருக்குத் தாவினார்.

செல்லமே படத்தில் நடிப்பிலும் அசத்திய ரீமா பின்னர் இரண்டு படத்தில் மாதவனுடன் பின்னி எடுத்தார். மீண்டும் விஷாலுடன் இணைந்து திமிரு படத்தில் குமுறிய ரீமா, வல்லவனில் சிம்புவுடன் இணைந்து கிளர்ச்சியான நடிப்பையும், கிளாமரையும் கொடுத்து ரசிகர்களின் இதயங்களை பதம் பார்த்தார்.

கூடவே சிம்புவுடன் வம்பிலும் இறங்கினார். இப்போது ரீமா சென் சும்மா இருக்கிறார். கையில் ஒரு தமிழ்ப் படமும் இல்லை. ஏன் இந்த திடீர் தேக்கம் என்று தனக்குத் தானே கேள்விக் கேட்டுக் கொண்ட ரீமாவுக்கு, தமிழ் கற்றுக் கொள்ளாததால்தான் இத்தனை பிளவு என்பதைப் புரிந்து கொண்டார்.

இனியும் ஆங்கிலத்தில் பீட்டர் விட்டுக் கொண்டிருந்தால் கதைக்கு ஆகாது என்பதை உணர்ந்த ரீமா, இப்போது வாத்தியார் ஒருவரை வைத்துக் கொண்டு தமிழ் கற்க ஆரம்பித்துள்ளார், அதுவும் கசடற கற்கிறார்.

அந்த வாத்தியாரும் நன்னன் போல அனா, ஆவன்னா என நன்றாக கற்றுக் கொடுத்து வருகிறாராம். அடுத்த கட்டமாக சென்னைக்கே நிரந்தரமாக குடியேறி தமிழ் சினிமாவில் மேலும் ஒரு மகா ரவுண்டு வர ஆசைப்படுகிறாராம்.

அவரோட நட்பு என்னாச்சுக்கா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil