»   »  ரீமா ஃபிரஷ்!

ரீமா ஃபிரஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காடாறு மாதம், நாடாறு மாதம் என்ற கணக்காக 6 மாத இடைவெளிக்குப் பிறகு ஃபிரஷ்ஷாக இரண்டு புதிய பட வாய்ப்புகள் ரேவிஷ் ரீமா சென்னுக்கு வந்துள்ளனவாம்.

ரீமா சென் தமிழில் நடித்த கடைசிப் படம் ரெண்டு. மாதவனுடன் இணைந்து நடித்த அப்படத்தை இயக்கியது சுந்தர்.சி. மாபெரும் ஹிட் படமாகியும் கூட அதன் பின்னர் ரீமா புதிதாக எந்தத் தமிழ்ப் படத்திலும் புக் ஆவில்லை.

ஜெயம் ரவியுடன் இணைந்து ஜீவாவின் இயக்கத்தில் தாம் தூம் படத்தில் நடிக்க ரீமாவுக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த படத்தை நழுவ விட்டு விட்டார் ரீமா.

ஆனால் அதற்குப் பதிலாக இந்தியில் சல் சலா சல் என்ற படத்தில் புக் ஆகி அங்கு நடிக்கப் போனார். அப்படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டதாம். இந்த நிலையில் தனது மேனேஜர் மூலமாக கோலிவுட்டில் புதிய வாய்ப்புகள் இருக்கிறதா என்று கிளறிப் பார்த்தார் ரீமா.

இந்த முயற்சியில் அவருக்கு மாதவனுடன் சேர்ந்து நடிக்கும் புதிய வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. அதேபோல சுந்தர்.சியும், தான் இயக்கப் போகும் அடுத்த படத்தில் வாய்ப்பளிப்பதாக ரீமாவுக்கு பிராமிஸ் செய்துள்ளாராம்.

இந்த நிலையில் யமகோலா என்ற புதிய தெலுங்குப் படத்திலும் ரீமா புக் ஆகியுள்ளார். சீனிவாச ரெட்டி இப்படத்தை இயக்குகிறார். தெலுங்கு ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். மீரா ஜாஸ்மினும் இப்படத்தில் இருக்கிறார்.

எத்தனை ஹீரோயின் இருந்தால் என்ன ஃபிரஷ் ரீமா படத்தில் இருந்தால் அதன் வெயிட்டே தனிதான் என்கிறது ரீமா தரப்பு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil