»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போது கோலிவுட்டில் ஹாட் நியூஸ் என்னவென்றால், செல்லமே படத்தில் ரீமாசென் காட்டிய கவர்ச்சிதான்.

செல்லமே படம் இயக்குனர் காந்திகிருஷ்ணாவுக்கு (ஷங்கரின் உதவியாளர்) வாழ்க்கை தருதோ இல்லையோ,படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ரீமாசென்னுக்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

படத்தின் கதையே கொஞ்சம் வில்லங்கமானதுதான். ஒரு காதல் தம்பதியின் வாழ்க்கையில் கல்லூரி மாணவன்ஒருவன் பேயிங் கெஸ்டாக நுழைகிறான்.

மணமான பெண் என்றும் பாராமல் காதலிக்கிறான். இறுதியில்என்னவாகிறது என்பதுதான் படம்.

கதையே அப்படி இப்படி என்பதால், ரீமாசென்னும் அதற்கேற்றவாறு வளைந்து கொடுத்து நடித்துள்ளார். படம்முழுக்க கவர்ச்சித் தாண்டவம் ஆடியிருக்கிறாராம் ரீமாசென்.

குறிப்பாக ஒரு படுக்கையறைக் காட்சியில் ரீமாசென்காட்டிய தாராளத்தைப் பார்த்து இயக்குனரும், ஒளிப்பதிவாளர்களும் அசந்து விட்டார்களாம்.

படுக்கையறைக் காட்சி படமாக்கப்பட்டபோது, முக்கியமானவர்கள் தவிர யாரையும் அனுமதிக்காதீர்கள் என்றுகண்டிஷன் போட்டு விட்டுத்தான் கேமரா முன்பு நின்றாராம் ரீமாசென்.

பின்பு அவர் காட்டிய நெருக்கத்தையும்,கவர்ச்சியையும் நெடுநேரம் கேமராவால் சுட்டுக் கொண்டார்களாம்.

இந்தப் படத்தின் ஸ்டில்யைப் பார்த்து விட்டு மனம் குளிர்ந்து போன தனது சொந்தப் படமான கிரியில் ஒப்பந்தம்செய்தார் அர்ஜூன்.

செல்லமே படத்தைப் போலவே, இந்தப் படத்திலும் கூச்சம் நாச்சம் எதுவுமில்லாமல் நடித்துவருகிறாராம் ரீமாசென். இந்தப் படத்தில் கதாநாயகன் அர்ஜூன் தான்.

இதற்கிடையே தெலுங்கில் ரீமாசென் காட்டிய கவர்ச்சி காரணமாக ஹிட்டான, வா வா ராம்ஜி என்ற படத்தைதமிழில் ரீமேக் செய்யவுள்ளார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil