»   »  படிக்க போகிறார் அபிராமி

படிக்க போகிறார் அபிராமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

படம்தான் வரவில்லை, படிக்கவாவது போகலாம் என்று முடிவு செய்துவிட்டார் அபிராமி.

கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டேன் என்று கொள்கையோடு தமிழ் படவுலகில் குதித்த கேரளத்துக்கிளிகள் ஒன்றிரண்டு படங்களுக்குப் பிறகு அந்த கொள்கையை கட்டியிருக்கும் சேலையோடு காற்றில் பறக்க விட்டு விடுவார்கள். அபிராமியும் அதற்கு விதிவிலக்கல்ல.

அசரடிக்கிற உயரமும், அதற்கேற்ற வகையில் பூசினாற்போன்ற உடல்வாகுடன் அறிமுகமானவர் அபிராமி. ஆரம்பித்திலிருந்தே அர்ஜூன், சரத்குமார், பிரபு போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்து வந்ததால் இளைய தலைமுறை நடிகர்கள் இவரை அண்ணி என்று அழைக்காத குறைதான்.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், கதைக்குத் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்று திரையுலகின் அரிச்சுவடி வசனத்தை ஒப்பித்தார். ஆனாலும் வாய்ப்புகள் குவிந்து விடவில்லை. இந் நிலையில் தான் கமல் தனது விருமாண்டி படத்தில் கதாநாயகியாக்கினார்.

வாராது வந்த வாய்ப்பு என்பதால் அபிராமி படத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார். நடித்தார் என்பதை விட அன்னலட்சுமியாகவே மாறினார் என்று கூட சொல்லலாம். படமும் ஹிட். அதன்பிறகாவது வாய்ப்புகள் வரும் என்று நினைத்தவருக்கு ஏமாற்றம்தான்.

இதற்கிடையே மூத்த நடிகர்களுடன் நடிப்பதால்தான் வாய்ப்புகள் வருவதில்லை என்று சக நடிகைகள் சொல்லவே, சுதாரித்துக் கொண்ட அபிராமி, படங்கள் இல்லாமல் வீட்டில் இருந்தாலும் பரவாயில்லை, பெரிய நடிகர்களுடன் நடிப்பதில்லை என்று முடிவெடுத்தார்.

வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில் எதையாவது படிக்கலாம் என்று முடிவெடுத்தவர், அப்படியே அந்தப் பக்கம் ஆர்வம் அதிகமாகி படிப்பதற்கு வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளார்.

அபிராமியைப் போலவே, காலேஜ் பக்கம் போக முடிவு செய்துள்ள இன்னொரு நடிகை ஷெரீன்.

துள்ளுவதோ இளமையில் அறிகமாகி இளம் உள்ளங்களை துள்ள வைத்தவர் ஷெரீன். பெரிய ரவுண்டு வரப் போகிறார் என்று எல்லோரும் எதிர்பார்த்தபோது, தனது ஒத்துழையாமை இயக்கத்தால் புஸ் ஆகிப் போனார்.

திடீரென அம்மாவுடன் கோபம், காதலருடன் லூட்டி என பல செய்திகள் புயல் போல வீசத் தொடங்கியதால், ஒரு படம் இல்லாமல் இப்போது சும்மா உட்கார்ந்திருக்கிறார்.

படம்தான் வரவில்லை, ஏதாவது படிக்கலாம் என்று முடிவு செய்த ஷெரீன் மைசூர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் படிக்க விண்ணப்பித்துள்ளாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil