»   »  ரீமா முத்தம்.. கார்த்தி வெட்கம்

ரீமா முத்தம்.. கார்த்தி வெட்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Reemasen
ரீமா சென் கொடுத்த தித்திக்கும் முத்தத்தில் சிக்கி திணறி, வெட்கிப் போய் விட்டாராம் பருத்தி வீரன் கார்த்தி.

பருத்தி வீரனுக்குப் பிறகு கார்த்தி கலக்கும் படம் ஆயிரத்தில் ஒருவன். செல்வராகவன் இயக்கும் இப்படத்தில் முதலில் சந்தியாதான், கார்த்தியுடன் டூயட் பாடுவதாக இருந்ததது. ஆனால் கடைசி நேரத்தில் சந்தியாவைத் தூக்கி விட்டு ரீமாவைப் போட்டு விட்டார் செல்வராகவன்.

படப்பிடிப்பு படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் சிலுசிலுவென ஒரு பாடல் காட்சியைப் படமாக்கினர்.

அதாவது காதல் மூடு இல்லாமல் டல் ஆக இருக்கிறார் கார்த்தி. ஆனால் ரீமாவோ முழு வேகத்தில் இருக்கிறார். கார்த்தியை காதல் டிராக்குக்கு இழுத்து வர ரீமா, ரொமான்ஸ் லுக்கோடு பாட்டுப் பாடி கார்த்தியை கதகதப்பாக்குவது போல காட்சி.

இந்த காதல் பாட்டில் விறுவிறுப்பை அதிகமாக்குவதற்காக, கார்த்தி உடல் முழுவதும் ரீமா சென் முத்தமிடுவது போல படம் பிடித்தனர்.

ரீமா சற்றும் தயக்கம் இல்லாமல் சட் சட்டென்று முத்தம் கொடுத்துக் கொண்டே போனார். ஆனால் கார்த்திதான் கூச்சப்பட்டுப் போய் விட்டாராம். இயக்குநரும், ரீமாவும் அவரை சகஜமாக்கி அப்புறமாக இந்த காதல் களேபரப் பாடலை படமாக்கி முடித்தனராம்.

'வீரனுக்கே' வெட்கமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil