»   »  இந்தி வாய்ப்பு கிடைத்ததும் தமிழைப் புறக்கணிக்கும் ரெஜினா

இந்தி வாய்ப்பு கிடைத்ததும் தமிழைப் புறக்கணிக்கும் ரெஜினா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரெஜினா கெஸெண்ட்ரா அறிமுகமானது தமிழில்தான். கண்ட நாள் முதல் படத்தில் அறிமுகமானாலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம் படங்கள் ரெஜினாவுக்கு பெயர் வாங்கித் தந்தன. அதன் பின் தமிழில் சரியாக வாய்ப்பு கிடைக்காத்தால் தெலுங்கு பக்கம் போனார். அங்கே தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவே சென்னையை மறந்தார்.

Regina refuses Tamil offers

தமிழில் மீண்டும் நெஞ்சம் மறப்பதில்லை, மாநகரம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். தொடர்ந்து தமிழில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ரெஜினாவை தேடி ஒரு பாலிவுட் பட வாய்ப்பு வந்திருக்கிறது. அதுவும் அமிதாப் பச்சன் நடிக்கும் படத்தில்.

Regina refuses Tamil offers

ஆங்கென் 2 என்ற அந்த பாலிவுட் படத்தில் ரெஜினா தான் நாயகி. இந்தியில் நடிப்பது என் நீண்ட நாள் கனவு என சொல்லியிருக்கும் ரெஜினா இனி இந்தியில் தான் அதிகம் கவனம் செலுத்தப்போகிறாராம்.

இதனால் தேடிவரும் தமிழ் இயக்குனர்களை 'ஆங்கென் 2' ரிலீஸ் வரைக் காத்திருக்க சொல்கிறாராம்.

English summary
Regina Casandra is now refusing to act in Tamil movies after got an offer from Hindi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil