»   »  மீண்டும் கமலுடன் ரேகா

மீண்டும் கமலுடன் ரேகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

புன்னகை மன்னனில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த ரேகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் இணைந்து நடிக்கிறார்.

கடலோரக் கவிதைகள் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ரேகா. பாரதிராஜாவின் மோதிரக் கையால் குட்டுப்பட்ட ரேகா, முதல் படத்திலேயே ரசிகர்களை வசீகரித்தார்.

அவர் அப்படத்தில் ஏற்று நடித்த ஜெனீபர் என்ற கேரக்டர், ரொம்ப நாளைக்குப் பேசப்பட்டது. அதன் பிறகு விறுவிறுப்பாக பலருடன் இணைந்து நடித்து பிரபலமானார் ரேகா. கமல்ஹாசனுடன் புன்னகை மன்னனில் இணைந்து நடித்தும் அசத்தினார்.

கிட்டத்தட்ட 80 படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ரேகா, சமீப காலமாக அம்மா, அண்ணி கேரக்டருக்கு இறங்கி விட்டார். இந்த நிலையில் கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்துள்ளது.

தசாவதாரம் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க கமலிடமிருந்து அழைப்பு வரவே தட்டாமல் ஏற்றுக் கொண்டாராம் ரேகா. மீண்டும் கமலுடன் இணைந்து நடிப்பது அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம்.

தற்போது ஏன் அதிக படங்களில் நடிப்பதில்லை என்று ரேகாவிடம் கேட்டால், எனக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிப்பதில்லை. வெறுமனே வந்து போவதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால்தான் அதிக படங்களில் நடிக்க முடியவில்லை என்கிறார் ரேகா.

ரேகாவின் சம்பளம் 2 லட்சம் என்கிறார்கள். அதைக் குறைக்காமல் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிப்பதற்கு பச்சைக் கொடி காட்டுகிறாராம் ரேகா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil