»   »  ரேகாவுக்கு வயசு 53

ரேகாவுக்கு வயசு 53

Subscribe to Oneindia Tamil


இந்தித் திரையுலகின் முன்னாள் கனவுக் கன்னி ரேகா இன்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடினார்.

Click here for more images

காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மகள்தான் ரேகா. சிறு வயதிலேயே மும்பைக்கு தாயுடன் இடம் பெயர்ந்து விட்ட ரேகா, தந்தை வழியில் நடிப்புலகில் புகுந்தார்.

1969ம் ஆண்டு இவர் நாயகியாக நடித்த முதல் படம் வெளியானது. அன்று முதல் 80களின் இறுதி வரை பல்வேறு படங்களில் நாயகியாக நடித்து அசத்தினார் ரேகா.

ஜெமினி காதல் மன்னன் என்றால், ரேகா, இந்தி ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தார். சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முதல் ஜிதேந்திரா வரை பலருடனும் இணைந்து நடித்துள்ளார் ரேகா.

கவர்ச்சி நாயகியாக, நல்ல டான்சராக, திறமையான நடிகையாக பல தரப்பட்ட வேடங்களில் நடித்துள்ள ரேகாவுக்கு இன்று 53வது பிறந்த நாளாகும்.

மும்பையில் உள்ள தனது வீட்டில் சிம்பிளாக தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் ரேகா.

நாமும் வாழ்த்துவோம்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil