»   »  விஜய் சேதுபதியோடு மீண்டும் 'கொஞ்சிப் பேசிட வேணும்!' - ரம்யா நம்பீசன்!

விஜய் சேதுபதியோடு மீண்டும் 'கொஞ்சிப் பேசிட வேணும்!' - ரம்யா நம்பீசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பாடகியும் நடிகையுமான ரம்யா நம்பீசன் கன்னடத்தில் தர்ஷன் நாயகனாக நடிக்கும் 'குருஷேத்ரா' என்ற சரித்திரப் படத்தில் நடித்து வருகிறார்.

'சேதுபதி' படத்திற்குப் பிறகு தமிழில் 'நட்புன்னா என்னான்னு தெரியுமா', 'சத்யா' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் ரம்யா நம்பீசன்.

'விஜய் சேதுபதியுடன் மீண்டும் நடிக்க முயற்சி செய்யவில்லை ஆனாலும் கண்டிப்பாக தொடர்ந்து வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்' எனக் கூறியிருக்கிறார் ரம்யா நம்பீசன்.

பீட்சா திரைப்படம் :

பீட்சா திரைப்படம் :

தமிழில் 'பீட்சா' படத்திற்கு முன்பே ரம்யா நம்பீசன் படங்களில் நடித்து வந்தபோதும் விஜய் சேதுபதியுடன் 'பீட்சா' படத்தில் நடித்த பிறகுதான் பேசப்பட்டார்.

சேதுபதி திரைப்படம் :

சேதுபதி திரைப்படம் :

அதேபோல் பீட்சாவுக்குப் பிறகு பல படங்களில் நடித்தபோதும் 'சேதுபதி' படத்தில் நடித்தபோது மறுபடியும் பேசப்பட்டார். ஆக, விஜய் சேதுபதியுடன் ரம்யா நம்பீசன் இணைந்த இரண்டு படங்களுமே ரம்யாவின் சினிமா பயணத்திற்கு வலு சேர்த்தன.

கொஞ்சிப் பேசிட வேணாம் :

கொஞ்சிப் பேசிட வேணாம் :

'சேதுபதி' படத்தில் விஜய் சேதுபதி - ரம்யா நம்பீசன் ஜோடி ரொமான்ஸ் காட்சிகளுக்காகக் கொண்டாடப்பட்டது. தமிழ் ரசிகர்கள் பலர் இந்த ஜோடியை வெகுவாக ரசித்தனர்.

விஜய் சேதுபதியோடு நடிக்கவேண்டும் :

விஜய் சேதுபதியோடு நடிக்கவேண்டும் :

விஜய் சேதுபதியுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம் ரம்யா நம்பீசன். இதுவரை முயற்சி செய்யவில்லை என்றாலும் கண்டிப்பாக அந்த வாய்ப்புகள் கிடைக்கும் எனறு எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார் ரம்யா நம்பீசன்.

English summary
Remya Nambeesan was famous after she had acted in films 'Pizza' and 'Sethupathi' with Vijay Sethupathi. Remya Nambeesan has said that she will be expect to re-play with Vijay Sethupathi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil