»   »  ரேணுகாவின் சண்டித்தனம்!

ரேணுகாவின் சண்டித்தனம்!

Subscribe to Oneindia Tamil
நடிக்க வந்து ஒரு படம் கூட இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் ரேணுகா மேனன் சண்டித்தனம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

கேரளக் கரையிலிருந்து ஏகப்பட்ட குஜிலிகள் தமிழ் சினிமாவுக்குப் படையெடுக்கும் காலம் இது. தமிழ் சினிமா மீது கேரளப் பெண்களுக்குமோகம் நன்கு தெரிந்தது தான்.

நாளுக்கொரு கேரள நாயகி கோலிவுட்டுக்குள் நேரடியாக நுழைந்து வரும் நிலையில், அப்படியே தெலுங்கு வழியாக ஒருவர் வந்துகுதித்திருக்கிறார். அவர் தான் ரேணுகா மேனன்.

கேரளவில் 20 படத்தில் நடித்தால் கிடைக்கும் சம்பளம் தெலுங்கில் ஒரே படத்தில் கிடைக்கும். அதே போல மலையாளத்தில் 10 படங்களில்கிடைக்கும் ஊதியம் தமிழில் ஒரே படம் வாங்கித் தந்துவிடும்.

இதனால் தெலுங்குக்கு முதலிடம் தந்து அங்கு போனவர், அங்கு மும்பை வரவுகள் காட்டி வரும் அசகாய திறமைகளுக்கு ஈடு கொடுக்கமுடியாமல் தமிழ் பக்கம் கரையொதுங்கி இருக்கிறார்.

இயக்குனர் ஷங்கரிடம் நீண்டகாலமாக உதவியாளராக இருந்து முன்னாள் ஆனந்த விகடன் நிருபர் ஹோசிமின் இயக்கும் முதல் படம்பிப்ரவரி14 (காதலர் தினம்).

இதில் காதல் பரத்துக்கு (பாய்ஸ் பரத் பட்டம் எல்லாம் போயே போச்சு) ஜோடியாக நடித்து வருகிறார் ரேணுகா மேனன். படத்தின்ஷூட்டிங் பிப்ரவரி 14ம் தேதி ஆரம்பானது. ஆனால் ரேணுகாவின் சேட்டைகள் அதற்கு முன்பே ஆரம்பமாகி விட்டதாக தயாரிப்பாளர்தரப்பு புலம்பத் தொடங்கியுள்ளது.

பட விழாவுக்கு வரும் ரேணுகா தங்குவதற்காக ஒரு ஹோட்டலை புக் செய்திருந்தார்கள். அங்கு தாய்க்குலம் அண்ட் பேமிலி பிரண்ட்ஸ்புடை சூழ வந்த ரேணுகா, அந்த ஹோட்டல் தனக்கு ராசியில்லை(?) என்று கூறி விட்டு வேறு ஹோட்டலுக்கு மாறியுள்ளார். அங்கும் அறைபிடிக்கவில்லை என்று கூறி இன்னொரு ஹோட்டலுக்குப் பாய்ந்துள்ளார்.

இந்த வகையில் தயாரிப்பாளர்களுக்கு பல ஆயிரங்கள் தண்டமானதாம்.

அது மட்டுமல்லாது பூஜை தினத்தன்றும் லேட்டாகவே வந்தார் ரேணுகா. கேட்டால், சாரி சார் கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் என்றாராம்கூலாக.

அப்புறம் சூட்டிங் தொடங்கிய பின்னரும் ஹோட்டல் மாறுவதை ரேணுகா மேனன் நிறுத்தவே இல்லையாம். இந்த ரூம் வேண்டாம், அந்தஹோட்டல்ல தண்ணி சரியில்லை என்று புகார்களை வாசித்து அடிக்கடி ஜாகையை மாற்றிக் கொண்டே இருக்கிறாராம். எல்லாம்தயாரிப்பாளர் செலவு தான்.

இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கல... அதற்குள்ளயா?

ரேணுகா ஹோட்டல்களை மாற்றுவதற்கு த்ரிஷாவை மையமாக வைத்து கிளம்பிய வீடியோ மேட்டர் பயம் தான் காரணமோ எனசந்தேகிக்கின்றன கோடம்பாக்கம் குருவிகள்.

சரி, அது போகட்டும். பிப்ரவரி 14 எப்படி ஆரம்பித்துள்ளது? என்று கேட்டார் உற்சாகமாக பேசுகிறார் இயக்குனர் ஹோசிமின்.

காதல் சப்ஜெக்ட்தான். பிப்ரவரி 14 என்றால் எல்லோருக்கும் ஞாபகம் வருவது காதலர் தினம்தானே. அதனால் தான் வித்தியாசமாக அந்ததலைப்பை வைத்தேன். படமும் வித்தியாசமாகவே இருக்கும் என்றார்.

படத்தில் பரத்துக்கு படு ஜாலி பையன் வேடம். டான்ஸ், பாட்டு, பைட் என அத்தனை அம்சமும் உள்ள கேரக்டராம். காதல் படத்தில்சீரியஸான ரோலில் நடித்த பின்னர் அப்படியே உல்டாவாக இதில் நடிக்கிறார்.

கேமராவைப் பிடிப்பது சேது, நந்தாவின் சினிமாட்டோகிராபி செய்த ரத்னவேலு. இசை பரத்வாஜ்.

சென்னை தவிர கேரளா, ஊட்டியிலும் சூட்டிங் நடக்கிறது.

படத்தைத் தயாரிப்பது சேலம் ஏ.சந்திரசேகரன். இவர் ஏற்கனவே தனுஷை வைத்து சுள்ளான் படத்தைத் தயாரிதது கையை சுட்டுக்கொண்டவர். இப்போது சூர்யா-அசினை வைத்து கஜினி படத்தை பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil