»   »  ரேணுகாவின் அதிர்ஷ்டம்

ரேணுகாவின் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

இதுக்குப் பெயர் தான் அதிர்ஷ்டம்.

ஜெயம் ரவியோடு ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ரோணுகா மேனனுக்கு அந்தப் படம் வெளிவருவதற்குள்ளாகவே அடுத்தும் ஒருமெகா பட்ஜெட் படம் கிடைத்துவிட்டது

கேரளாவைச் சேர்ந்த ரேணுகா மலையாளத்தில் அறிமுகமான கையோடு தனது டப்பு சேர்க்கும் முயற்சிகளை ஆரம்பித்தார். அதாங்க..மலையாளப் படங்களுக்கு கும்பிடி போட்டுவிட்டு தமிழ் அல்லது தெலுங்கில் நல்ல சம்பளத்துக்கு நடிப்பது.

மலையாளத்தில் இன்னும் மம்மூட்டி, மோகன் லாலே லட்சங்களைத் தாண்டவில்லை. நடிகைகள் நிலையை நினைத்துப் பாருங்கள். இதனால்தான் நடிக்க என்று வந்துவிட்டால் மலையாள நடிகைகள் கண் வைப்பது தமிழ், தெலுங்கின் மீது தான்.

இந்த பார்முலாப்படி மலையாளத்தில் இருந்து தெலுங்குக்குப் போனார் ரேணுகா. அங்கு மலையாள பிட் பட லெவலில் காட்சிகள் கொண்டசில படங்களில் நல்லாவே கவர்ச்சி காட்டி நடித்தார். அப்படியே தமிழில் நடிக்க ஆட்களை வைத்து கொக்கி போட்டார்.

முதலில் இவரது கொக்கியில் மாட்டியது ராஸ்கல் என்ற படம். இதில் ஹீரோ ஜெயம் ரவி. சன் ஆப் மகாலட்சுமிக்குப் பிறகு புதிய தெம்புடன்ரவி நடிக்கும் படங்களில் ஒன்று ராஸ்கல்.

லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் பிரமாண்டமான படம் இது. இசை யுவன் சங்கர் ராஜா. படத்தை இயக்குவது பாபு யோகேஸ்வரன்.பொள்ளாச்சியில் சூடாக சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தப் படமே இன்னும் வெளியாகாத நிலையில் ரேணுகாவுக்கு தமிழில் அடுத்த படமும் புக் ஆகிவிட்டது. இதைத் தயாரிப்பது ஸ்ரீசரவணாகிரியேசன்ஸ் நிறுவனத்தினர். தனுஷை வைத்து மெகா பட்ஜெட்டில் சுள்ளான் படத்தை எடுத்து கையை சுட்டுக் கொண்டவர்கள் இவர்கள்.

ஆனாலும் சலிக்காமல் அடுத்த படத்தையும் பிரமாண்டமாகவே எடுக்கிறது இந்த நிறுவனம். பிப்ரவரி 14 என்ற இந்தப் படத்தை இயக்கப்போவது ஹோசிமின். ஆனந்த விகடனில் ரிப்போர்டராக இருந்து பின்னர் ஷங்கரிடம் ஜீன்ஸ், இந்தியன், முதல்வன் ஆகிய படங்களில்உதவியாளராகப் பணியாற்றிய இளைஞர்.

இதில் ரோணுகா தான் ஹீரோயின். ஹீரோவாக நடிப்பது பரத். முதல் படமான பாய்ஸ் ஊத்தி மூடினாலும் செல்லமே மற்றும் காதல் ஆகியபடங்கள் தந்த தெம்பினால் புதுவாழ்வு பெற்றிருக்கிறார் பரத்.

படத்தை கதை, திரைக்கதை வசனம் எழுதி ஹோசிமின் இயக்குகிறார். தனது குருநாதரைப் போலவே கிராபிக்ஸ் கலக்கல்கள் செய்யப்போகிறாராம்.

ஷங்கரின் உதவியாளராக இருந்தவர்கள் இயக்கும் படத்தில் பரத் நடிப்பது இது இரண்டாவது படம். காதல் படத்தைக் கூட ஷங்கர்தயாரிக்க அவரது உதவியாளர் பாலாஜி சக்திவேல் தான் இயக்கினார்.

பிப்ரவரி 14 படத்தின் ஒளிப்பதிவை ரத்னவேலு கவனிக்க இசையமைக்கப் போவது பரத்வாஜ்.

ஜனவரியில் தொடங்கப் போகும் இந்தப் படத்தின் சூட்டிங் ரேணுகா மேனனின் சொந்த மாநிலமான கேரளத்திலும் ஊட்டியிலும் நடக்கப்போகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil