»   »  தனக்கு ரொம்ப பிடித்தவரின் படத்தில் நடிக்கும் அமலா பால்

தனக்கு ரொம்ப பிடித்தவரின் படத்தில் நடிக்கும் அமலா பால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமலா பால் நடிகை ரேவதி இயக்கும் மலையாள படத்தில் நடிக்கிறார்.

கணவர் ஏ.எல். விஜய்யை பிரிந்த பிறகு நடிகை அமலா பால் படங்களில் படுபிசியாக உள்ளார். இதற்கிடையே நேரம் கிடைக்கும்போது எங்காவது சுற்றுலா செல்கிறார்.

Revathi to direct Amala Paul

அவர் தற்போது தனுஷின் விஐபி2, சின்ட்ரெல்லா, திருட்டுப் பயலே 2 உள்பட 5 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடிகை ரேவதி இயக்கும் மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ரேவதி தனக்கு மிகவும் பிடித்த நடிகை என்றும், அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் முன்பு அமலா தெரிவித்திருந்தார். இருவரும் சேர்ந்து அம்மா கணக்கு படத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் ரேவதியின் இயக்கத்தில் அமலா நடிக்கிறார். இன்னும் 2 ஆண்டுகளுக்கு நடிப்பை தவிர வேறு எண்ணம் இல்லை என்று அமலா தெரிவித்துள்ளார்.

English summary
According to reports, Amala Paul is going to act in a malayalam movie to be directed by actress Revathi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil