»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

காதல் கிறுக்கன் வெற்றியை வைத்தே சினிமாவில் நீடிப்பது குறித்து முடிவெடுக்க உள்ளார் ரிச்சா.

ஷாஜகான் படத்தில் நடித்ததோடு, வேறு படம் கிடைக்காமல் தமிழ் சினிமாவை விட்டே காத தூரம்ஓடிப் போன ரிச்சா பலோட் மீண்டும் காதல் கிறுக்கன் மூலம் கோலிவுட்டை கதிகலங்க வைக்க களம்இறங்கியுள்ளார்.

பார்த்திபன் ஹீரோவாக நடிக்க, ரிச்சா பலோட் ஜோடி சேரும் காதல் கிறுக்கன் படத்தை ஷக்திசிதம்பரம் இயக்குகிறார்.

இந்தப் படத்திற்காக ரிச்சா பலோட்டை தேடிப் பிடித்த கூட்டி வந்து ஹீரோயின்ஆக்கியிருக்கிறார்களாம்.

ஆனால் ரிச்சாவின் ராசி டேஞ்சர் ஆச்சே என்று கோலிவுட்டில்கிசுகிசுக்கிறார்கள்.

ஷாஜகான் படத்தில் ரிச்சா நடித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதித்ததையும்,படம் ஊத்திக் கொண்டதையும் சுட்டிக் காட்டும் அவர்கள், இந்தப் படம் நல்ல படியா முடிஞ்சு ஓடினாஅது பெரிய சாதனைதான் என்றும் பயம் காட்டுகிறார்கள்.

இவர்களது கவலை இப்படியென்றால், இந்தப் படம் சரியாக ஓடி வெற்றி பெற்றால்தான் தனதுஎதிர்காலம் என்பதால் இந்தப் படம் ஓடுவதை வைத்தே சினிமாவில் நீடிப்பதா, வேண்டாமாஎன்பதை தீர்மானிக்க உள்ளாராம் ரிச்சா.

காரில் வரும் தயாரிப்பாளர் "ரிக்ஷா"வில் வரும் நிலைக்கு செல்லுவதும், செல்லாமல் இருப்பதும்இப்போது "ரிச்சா" கையில்தான் உள்ளது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil