»   »  காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் ரித்திகா!

காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் ரித்திகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இறுதிச் சுற்று ரித்திகாவுக்கு கோடம்பாக்கம் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்க ஆரம்பித்துவிட்டது.

இறுதிச் சுற்றில் அவரது அசர வைக்கும் நடிப்பைப் பார்த்த காக்கா முட்டை மணிகண்டன், தனது அடுத்த பட நாயகியாக அவரை ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்தப் படத்துக்கு ஆண்டவன் கட்டளை என்று தலைப்பிட்டுள்ளனர்.

Rithika plays female lead in Aandavan Kattalai

மணிகண்டன் இப்போது குற்றமே தண்டனை படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு அடுத்ததாக ஆண்டவன் கட்டளையை இயக்குகிறார்.

இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் கதாநாயகியாக ரித்திகா சிங் தேர்வாகியுள்ளார். இறுதிச் சுற்று படத்தில் அவர் நடிப்பு சிறப்பாக இருந்ததால் அவரைத் தேர்வு செய்ததாக மணிகண்டன் தெரிவித்தார்.

ஆண்டவன் கட்டளை படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் தொடங்க உள்ளது.

English summary
Iruthi Sutru fame Rithika has signed as heroine in Kakka Muttai famed Manikandan's new movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil