»   »  தமிழ் கற்கும் ரித்திகா சிங்... உஷார் டாப் ஹீரோயின்ஸ்!

தமிழ் கற்கும் ரித்திகா சிங்... உஷார் டாப் ஹீரோயின்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பத்து ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் அதுவும் பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் காஜல் அகர்வால் போன்ற நடிகைகளே இன்னும் தமிழ் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. த்ரிஷா தமிழில் பேச மறுப்பார்.

ஆனால் மூன்றே படங்களில் நடித்திருக்கும் ரித்திகா சிங் தமிழ் கற்பதில் ஆர்வமாக இருக்கிறாராம்.

Rithika Singh learning Tamil

கடந்த ஆண்டு வெளியான இறுதிசுற்று மூலம் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தவர் ரித்திகா சிங். பாக்ஸரான இவர் நடிகையானது விபத்து என்றாலும் கூட அதன் பின் வரிசையாக சினிமா வாய்ப்புகள் தேடி வருகின்றன. காரணம் ரித்திகா காட்டும் டெடிகேஷன் தான். இப்போது தமிழையும் சரளமாக பேசக் கற்று வருகிறாராம்.

இது நிச்சயம் முன்னணி ஹீரோயின்களுக்கு கலக்கத்தைக் கொடுக்கும் செய்திதான்!

English summary
Actress Rithika Singh is now learning Tamil language after offers pouring from Tamil cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil