»   »  நடிப்புக்காக பாக்ஸிங்கை கைவிட்ட ரித்திகா சிங்!

நடிப்புக்காக பாக்ஸிங்கை கைவிட்ட ரித்திகா சிங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமா ஒரு மாய சுழல். உள்ளே நுழைந்தவர்கள் அது தரும் புகழில் இருந்து வெளியே வர தயங்குவார்கள். சினிமாவுக்காக எதை எதையோ இழந்தவர்கள் ஏராளம். அந்த வரிசையில் ரித்திகா சிங் தன் பாக்ஸிங்கை சினிமாவுக்காக கைவிட்டுவிட்டார்.

இறுதிசுற்று மூலம் அறிமுகமாகி முன்னணி ஹீரோயின்களை பின்னுக்கு தள்ளியவர் ரித்திகா சிங். ஆண்டவன் கட்டளை படத்திலும் ரித்திகாவுக்கு நல்ல பெயர் கிடைக்க தொடர்ந்து நடிப்பு வாய்ப்புகள் கதவைத் தட்டுகின்றன.

Rithika Singh turns full time actress in Tamil

அடிப்படையில் பாக்ஸரான ரித்திகா தன்னுடைய மதி கேரக்டருக்கு பொருந்துவார் என்று தான் தேர்வு செய்தார் இறுதிசுற்று சுதா கொங்கரா. இப்போது எல்லாவித வாய்ப்புகள் வருகின்றன. எனவே இனி பாக்ஸிங் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார் ரித்திகா.

அடுத்து விஜய் சேதுபதியுடன் மீண்டும் நடிக்கிறாராம்.

பாக்ஸிங்கில் பங்கேற்றால் நான்கு சுற்றுகள் வரை விளையாட வேண்டும். அப்போது முகத்தில் காயப்பட்டால் அது படங்களை பாதிக்கும். எனவே இனி பாக்ஸிங் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை. சிறிய அளவில் வீட்டிலேயே பிராக்டீஸ் மட்டும் பண்ணப்போகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

English summary
Boxer turned actress Rithika Singh has decided to continue in cinema as full time actress.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos