»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

100 படங்களில் நடித்த நடிகை ரோஜாவுக்கு சென்னையில் பாராட்டு விழா நடக்கிறது.

செம்பருத்தி படம் மூலம் தமிழ்த் திரைப்படவுலகில் நுழைந்தவர் நடிகை ரோஜா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழித்திரைப்படங்களில் நடித்துள்ளார்.

100 படங்களில் நடித்து முடித்து விட்ட நடிகை ரோஜாவுக்கு, திரை உலகினர் பாராட்டு விழா நடத்துகிறார்கள். இந்த விழா வரும் 31 ம் தேதி மாலை4.30 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

இதுகுறித்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணி நிருபர்களிடம் கூறியதாவது:

100 படங்களில் நடித்து முடித்து விட்ட ரோஜாவுக்கு பாராட்டு விழா நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதைப் பாராட்டு விழா என்று கூறுவதை விட நன்றிதெரிவிக்கும் விழா என்று கூறலாம்.

விழா மாலை 4.15 க்குத் தொடங்கி தொடர்ந்து 5 மணி நேரம் நடக்கும். விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். நடிகர், நடிகைகள்,டைரக்டர்கள், படஅதிபர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

பாராட்டு விழாவில் டான்ஸ் மாஸ்டர் லலிதா மணி குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெறும். இதில் நடிகைகள் மந்த்ரா, மும்தாஜ், ப்ரீதா, தேவயானி,கோவை சரளா நடிகர்கள் விவேக், வினீத், வடிவேலு, லாரன்ஸ் ஆகியோர் நடனம் ஆடுகிறார்கள்.

நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், பிரபு, கார்த்திக், சத்யராஜ், அர்ஜூன், முரளி, விஜய், நெப்போலியன், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர்பங்கேற்கிறார்கள்.

அதோடு அழகிகளின் ஆடை அணிவகுப்பு போட்டியும் நடக்கிறது. சிறந்த அழகியை டைரக்டர்கள் பாரதிராஜா, விக்ரமன், கே.எஸ்.ரவிகுமார்,ஆர்.கே.செல்வமணி, பி.வாசு, கஸ்தூரி ராஜா ஆகியோர் தேர்ந்தெடுத்து க்ரீடம் சூட்டுகிறார்கள். ரோஜா ஏற்புரை நிகழ்த்துகிறார் என்றார் செல்வமணி.

Read more about: actress, felicitaion, function, roja
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil