»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

செக் மோசடி வழக்கில் நடிகை ரோஜாவுக்கு எதிரான பிடிவாரண்ட் உத்தரவு சிறிது தளர்த்தப்பட்டுள்ளது.

பிடிவாரண்ட்டை அக்டோபர் 10ம் தேதிக்குள் வந்து அவர் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதுவரை ரோஜாவைக்கைது செய்யத் தேவையில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

முரளி மோகன் ரெட்டி என்பவர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் ரோஜா தன்னிடம்ரூ.10 லட்சம் கடன் வாங்கியிருந்ததாகவும், அதற்காக ரோஜா தன்னிடம் கொடுத்திருந்த செக் வங்கியிலிருந்துதிரும்பி வந்து விட்டதாகவும் கூறி வழக்குத் தாடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த 18ம் தேதிவிசாரணைக்கு வந்தது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டிருந்த ரோஜா அன்றுகோர்ட்டில்ஆஜராகவில்லை. இதையடுத்து ரோஜாவுக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட்டைநீதிபதி பிறப்பித்தார்.

இதைத் தொடர்ந்து ரோஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.தான் வெளிநாட்டில் இருப்பதால் கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை என்று அம்மனுவில் ரோஜா விளக்கம்கூறியிருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன் அக்டோபர்10ம் தேதிக்குள் ரோஜா நேரில் வந்து பிடிவாரண்ட்டைபெற்றுக் காள்ள வேண்டும். அதுவரை அவரைக் கைது செய்யத் தேவையில்லை என்று உத்தரவிட்டார்.

தற்போது சுவிட்சர்லாந்தில் கணவர் செல்வமணியுடன் தேனிலவு கொண்டாடி வரும் ரோஜாவுக்கு இந்த உத்தரவின்விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil