»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

மற்றொரு செக் மோசடி வழக்கில் நடிகை ரோஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சொந்தப் படம் எடுப்பதற்காக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த முரளி மோகன் ரெட்டி என்பவரிடம் ரூ.10லட்சம் கடன் வாங்கியிருந்தார் ரோஜா.

இந்தக் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்காக முன் தேதியிட்ட ஒரு "செக்"கை முரளியிடம் ரோஜாகொடுத்திருந்தார்.

குறிப்பிட்ட தேதியில் அந்த "செக்"கை வங்கியில் செலுத்திய போது, ரோஜாவின் வங்கிக் கணக்கில் அந்தஅளவுக்குப் பணம் இல்லாத காரணத்தால் "செக்" திரும்பி விட்டது.

இதையடுத்து ரோஜா மற்றும் அவருடைய சகோதரர் ஆகியோர் மீது சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்முரளி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திர போஸ், அவர்கள் இருவரும் ஜூன் 28ம் தேதி நீதிமன்றத்தில் கண்டிப்பாகஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் ரோஜாவோ அவருடைய சகோதரரோ அவ்வாறுஆஜராகவில்லை.

இதையடுத்து அவர்கள் இருவருக்கும் நேற்று பிடிவாரண்ட் பிறப்பித்தார் நீதிபதி ரவீந்திர போஸ். மேலும்இவ்வழக்கை வரும் 26ம் தேதிக்கு அவர் ஒத்திவைத்தார்.

ஏற்கனவே போத்ரா என்ற பைனான்சியரிடமும் இதுபோலவே கடன் வாங்கிய ரோஜா அதைத் திரும்பவும்செலுத்துவதற்குள் படாத பாடு பட்டுவிட்டார். ரோஜா கொடுத்த முன் தேதியிட்ட பல "செக்"குகளும் "பவுன்ஸ்"ஆகித் திரும்பியதால் கோர்ட்டுக்குப் போனார் போத்ரா.

இதைத் தொடர்ந்து ரோஜாவுக்கு நிறைய சம்மன்களும் வரத் தொடங்கின. இதனால் இடையில் ஒருமுறைதற்கொலைக்கும் கூட முயற்சித்தார்.

இது தொடர்பாக போத்ரா தொடர்ந்த வழக்கில் சென்னையில் உள்ள ஒரு அனாதை ஆசிரமக் குழந்தைகளுக்குஒருநாள் உணவு வழங்குவதோடு அவர்களுடன் அந்த நாள் முழுவதையும் செலவழிக்க வேண்டும் என்றுநீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சமீபத்தில் ரோஜா நிறைவேற்றினார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு "செக்" மோசடி வழக்கில் ரோஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு ஜெயலலிதாவை அழைத்தார் ரோஜா

இதற்கிடையே ரோஜா-செல்வமணி திருமண ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. வரும் செப்டம்பர் 11ம் தேதிஇருவருக்கும் திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெற உள்ளது.

தங்களுடைய திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்புவிடுத்துள்ளார் ரோஜா.

சமீபத்தில் தமிழக தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்த ரோஜா இதற்கான அழைப்பை விடுத்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil