»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

செக் மோசடி வழக்கில் நீதிமன்ற உத்தரவை ஏற்று சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடிகைரோஜா இன்று (புதன்கிழமை) ஆஜரானார்.

முரளி மோகன் ரெட்டி என்பவரிடம் ரூ.10 லட்சம் பணம் வாங்கியிருந்த ரோஜா, அதற்குரிய தொகைக்கானசெக்கைக் கொடுத்துள்ளார்.

ஆனால் ரோஜாவின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் செக் திரும்பி விட்டது. இதையடுத்து சைதாப்பேட்டைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார் ரெட்டி.

இந்த வழக்கில் ஆஜராகி தனது தரப்பு நியாயத்தை எடுத்து வைக்குமாறு சைதாப்பேட்டை கோர்ட்டிலிருந்துரோஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் சம்மனில் கூறப்பட்டிருந்த தேதியில் அவர் கோர்ட்டில்ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை சைதாப்பேட்டை 23-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்ரோஜா.

கோர்ட் உத்தரவு குறித்து தனக்கு சரியான தகவல் கிடைக்கவில்லை என்றும் இதன் காரணமாகவே நேரில்ஆஜராகவில்லை என்றும் கோர்ட்டை அவமதிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் ரோஜா நீதிபதியிடம்கூறினார்.

மீண்டும் "செக்" மோசடி: ரோஜாவுக்கு பிடிவாரண்ட்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil