»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேன் நிலவு சென்றுள்ள நடிகை ரோஜாவுக்கு எதிராக செக் மோசடி வழக்கில் மீண்டும் பிடிவாரண்ட்பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரோஜா பல செக் மோசடி வழக்குகளில் மாட்டிக் கொண்டுள்ளார். இது தொடர்பாக ஒரு முறை அவர் நீதிமன்றத்தில்ஆஜராகவில்லை என்பதால், மன நிலை சரியில்லாத குழந்தைகள் காப்பகத்தில் ஒரு நாள் முழுவதும் செலவிடவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரும் அவ்வாறே ஒரு நாள் முழுக்க அந்தக் காப்பகத்தில் இருந்தார்.

இதற்கிடையே தெலுங்கு பட அதிபரான முரளி மோகன் ரெட்டி என்பவர் ரோஜா மீது தொடர்ந்துள்ள ரூ.10 லட்சம்செக் மோசடி வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு நேற்று சென்னை-சைதாப்பேட்டை 23வது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் ரோஜாஆஜராகவில்லை. அவருடைய வக்கீல் சிவாவும் நேற்று நீதிமன்றத்துக்கு வரவில்லை.

இதையடுத்து ரோஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி ரவீந்திர போஸ் உத்தரவிட்டு, விசாரணையைஅக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதே போல் தொடர்பான செய்திகள்பும் ஒருமுறை ரோஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர்நீதிமன்றத்தில் ஆஜரானதைத் தொடர்ந்து அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் இயக்குநர் செல்வமணியைத் திருமணம் செய்து கொண்ட ரோஜா, தற்போதுகணவருடன் சுவிட்சர்லாந்தில் தேன் நிலவைக் கொண்டாடி வருகிறார். இதனால் தான் நேற்று அவரால்நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை.

வக்கீல்கள் போராட்டம் நடந்து கொண்டிருப்பதால் தன்னாலும் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றுரோஜாவின் வக்கீல் சிவா கூறினார். மேலும், பிடிவாரண்ட் குறித்து ரோஜாவுக்குத் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை திரும்பியவுடன் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்றும் சிவா கூறினார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil