»   »  அம்மா வேடத்தில் ரோஜா

அம்மா வேடத்தில் ரோஜா

Subscribe to Oneindia Tamil

அரசு படத்தில் அப்பா சரத்குமாருக்கு ஜோடியாக, மகன் சரத்குமாருக்கு அம்மாவாக நடித்தரோஜாவை இனி நிறைய படங்களில் அம்மா ரோலில் பார்க்க முடியும்.

தமிழ்-தெலுங்கு சினிமா, அரசியல், சின்னத்திரை என அடுத்தடுத்து கைவிடப்பட்ட நடிகை ரோஜாஇப்போது கன்னடப் பக்கம் ஒதுங்கியுள்ளார். ஹீரோயினாக அல்ல, அம்மா ரோலில் தான்.

ரோஜா அளவுக்கு தமிழ் சினிமாவில் எந்த நடிகையும் தோல்வியைச் சந்தித்து இருக்க மாட்டார்கள். பிரசாந்துடன்நடித்த செம்பருத்தி (முதல் படம்), ரஜினியுடன் நடித்த உழைப்பாளி, வீரா, சரத்குமாருடன் நடித்த சூரியன்,கார்த்திக்குடன் நடித்த உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படங்களைத் தவிர அவர் நடித்தபெரும்பான்மையான படங்கள் தோல்விப் படங்களே.

தனது காதலர் செல்வமணி (இப்போது கணவர்) சும்மா இருக்கிறாரே என்று அவருக்காக தயாரித்த அதிரடிப்படைமிகப் பெரிய பிளாப். அந்தப் பட தயாரிப்பின்போது வாங்கிய கடனுக்காக இப்போதும் கோர்ட் படியேறிவருகிறார்.

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த பின்பு, டிவி பக்கம் போனார். விஜய் டிவியில் அவர் நடித்த சீரியல், டி.ஆர்.பி.ரேட்டிங்கில் அதால பாதாளத்திற்குப் போக அங்கும் தோல்வி முகம்.

சரி, அரசியலில் இறங்கலாம் என்று தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து, தான் பிறந்த தொகுதியில் போட்டியிட்டார்.இவர் தோற்றதோடு, ஹைடெக் முதல்வர் என்று அழைக்கப்பட்டு வந்த சந்திரபாபு நாயுடுவும் ஆட்சியை இழந்தார்.

தோல்வி மட்டுமல்ல, வதந்திகளையும் ரோஜா சந்தித்த அளவுக்கு யாரும் சந்தித்ததில்லை.

ரோஜாவுக்கு எய்ட்ஸ், ரோஜா கருக்கலைப்பு, ரோஜா- செல்வமணி காதல் முறிவு, ரோஜா தற்கொலை என்றுவதந்திகள் அவரை சுழற்றியடித்தன.

ஆனால் இவற்றையெல்லாம் கலங்காமல் எதிர்கொண்டவர் ரோஜா. தோல்வி எனக்குப் புதிதல்ல என்றுசிரித்தவாறே அடுத்த ரவுண்டுக்குக் கிளம்பிவிடுவார்.

அப்படிதான் இப்போது கன்னடப் பக்கம் போயிருக்கிறார். தமிழ் சினிமா சுத்தமாகக் கை கழுவி விட்ட நிலையில்,கன்னடப் படம் ஒன்றில் அம்மா வேஷம் கட்டப் போய்விட்டார். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நதியாசெய்த ரோலை, கன்னடத்தில் ரோஜா செய்கிறார்.

தமிழில் அம்மா ரோலில் நடிக்கத் தயார் என்று அறிவித்திருக்கிறார்.

சத்யராஜ் சார்.. உங்க அடுத்த படத்துல அம்மா ரோலுக்கு ஆள் தேடுறதா சொன்னாங்களே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil