»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

தேவயாணியின் ஸ்டைலில் தனது கணவர் ஆர்.கே.செல்வமணியை இயக்குனராகப் போட்டு சொந்தப் படம் தயாரித்து அதில் தானே ஹீரோயின் ஆக நடிக்க முடிவுசெய்துள்ளார் ரோஜா.

ஏற்கனவே சொந்தப் படம் எடுத்து பெரும் நஷ்டப்பட்டவர் ரோஜா.

வழக்கமாகவே ஒரு ஹீரோயினுக்கு கல்யாணமாகி விட்டால் அவருக்கு கதாநாயகி வாய்ப்பு மறுக்கப்படும் என்பது கோலிவுட்டில் எழுதப்படாதவிதியாக உள்ளது. தேவயானிக்கும் அதே நிலை ஏற்பட்டது. பிரம்மப்பிரயத்தனம் செய்து அவர் மீண்டும் சில வாய்ப்புகளைப் பெற்றார். ஆனால், அதுதொடரவில்லை. இதனால் கணவர் ராஜகுமாரனை வைத்து சொந்தப் படம் எடுத்து வருகிறார்.

ரோஜா விஷயத்தில் நிலைமை ரொம்ப மோசம். திருமணம் ஆகும்போதே அவரிடம் அவ்வளவாக சான்ஸ் இல்லை. கல்யாணத்துப் பிறகு கையில் ஒரு படம்கூட அவரிடம் இல்லை. இதனால் கணவரை வைத்து தானே ஒரு படம் எடுக்க முடிவு செய்துள்ளார். அதில் ஹீரோயின் ரோஜா தானாம்.

இதையடுத்து படத்தின் கதையை தேட (வெளிநாடு மற்றும் உள்நாட்டு சி.டிகளில்) ஆரம்பித்துள்ளனராம். கதை சிக்கியவுடன், பூஜை போடப்போகிறார்களாம்.

ஹீரோயின் ஓ.கே., ஹீரோ யார் என்று தெரியவில்லை, கண்டிப்பாக ஆர்.கே.செல்வமணியாக இருக்காது என்று நம்புவோமாக!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil