»   »  ஐம்பது லட்சத்துக்கு ஐட்டம் டான்சரான காஜல் அகர்வால்

ஐம்பது லட்சத்துக்கு ஐட்டம் டான்சரான காஜல் அகர்வால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜித் நடிக்க சிவா இயக்கும் படத்தில் காஜல்தான் ஹீரோயின் என தெரிந்துவிட்டது. இந்நிலையில் தெலுங்கு படம் ஒன்றில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடவிருக்கிறார் காஜல் அகர்வால்.

செப்டம்பர் 2 ம் தேதி வெளிவரவிருக்கும் ஜனதா காரஜி என்ற படத்தில் ஜுனியர் என் டி ஆருடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இந்த படத்தில் சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் ஹீரோயின்கள்.

முதலில் இந்த பாடலுக்கு ஆடவிருந்தவர் தமன்னா. பாகுபலி படத்தின் படப்பிடிப்பில் அவர் பிஸியாக இருப்பதால் கால்ஷீட் கிடைக்கவில்லையாம்.

Rs 50 lakh for Kajal to perform an Item

ஜுனியர் என் டி ஆருடன் காஜல் நடித்த பிருந்தாவனம், பாட்சா, டெம்பர் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. எனவே செண்டிமெண்டாகவும் காஜல் இருக்கட்டும் என விரும்பிய ஜுனியர் என் டி ஆர் இயக்குனரிடம் சொல்லியுள்ளார். ஒரு பாடலுக்கு என்றதும் ஐம்பது லட்சம் சம்பளம் கேட்டுள்ளார் காஜல்.

பரவாயில்லை என்று ஓகே சொல்லி ஆடவைத்துள்ளனர்.

English summary
Sources say that Kajal Agarwal has accepted an Item number for Rs 50 lakh payment.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil