»   »  மீண்டு(ம்) வந்த ரூபிணி!

மீண்டு(ம்) வந்த ரூபிணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எய்ட்ஸ் நோயால் இறந்து விட்டார், விபச்சார வழக்கில் பிடிபடப் போகிறார் என்று பலமான வதந்திகளால் பல காலமாகபாதிக்கப்பட்டிருந்த நடிகை ரூபிணி மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார்.

விஜயகாந்த்தின் கூலிக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரூபிணி. இந்தியிலிருந்து தமிழுக்கு வந்தநாயகிகளில் இவரும் ஒருவர்.

வெகு சீக்கிரமே ரஜினிக்கு ஜோடியாக மனிதன் படத்தில் நடித்தார். அதனையடுத்து முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்டுவந்தார்.

அவர் நடித்து பேர் சொல்லும்படி வந்தது உழைப்பாளி படத்தில், ஒரு மைனா மைனாக்குருவி பாடலுக்கு ஆடிய ஆட்டம்தான்.அதன் பின்னர் ஆளைக் காணோம்.

எய்ட்ஸ் நோயால் ரூபிணி பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாகக் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு வதந்திகள் பரவின. அப்போதுபெங்களூரில் நிருபர்கள் முன் தோன்றி, நான் உயிரோடு தான் இருக்கிறேன் என்று கோபத்துடன் பேட்டியளித்தார்.

இதன் பின் கொஞ்ச காலம் கழித்து, விபச்சாரத்தில் ரூபிணி ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படப் போகிறார்என்றும் வதந்திகள் உலா வந்தன. ஆனால், இதற்கு ரூபிணியிடம் இருந்து காரசார பேட்டி ஏதும் வெளியாகவில்லை.அமைதியாகவே இருந்தார்.

இப்போது நீண்ட கால தலைமறைவு வாழ்க்கைக்குப் பின்னர் ரூபிணி மீண்டும் சென்னை வந்துள்ளார்.

மனிதன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க தனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனை சந்தித்துப் பேசினார்.பின்பு ரஜினி, சத்யராஜ், கலைப்புலி எஸ்.தாணு போன்றோரைச் சந்தித்து வாய்ப்பு கேட்டார்.

ரூபிணியைப் பார்த்தவுடன், இவ்வளவு வயதானாலும் அப்படியே இளமையை வச்சுருக்கீங்களே என்று காம்ப்ளிமெண்ட்செய்ததோடு ஒரு படத்தில் சான்சும் கொடுத்துவிட்டார் சத்யராஜ். பெருமாள்சாமி என்ற படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாகநடிக்கவிருக்கிறார் ரூபிணி.

இந்தப் படத்தில் சத்யராஜின் மகன் சிபிராஜூம் நடிக்கிறார்.

வயது போய்விட்டாலும் இன்னும் உடலை சிக் என்று வைத்திருக்கும் ரூபிணிக்கு அம்மா, அக்கா ரோல்களில் நடிக்க துளிக் கூடவிருப்பமில்லையாம். நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன், இல்லாவிட்டால் நடிக்கவே மாட்டேன் என்கிறார்.

ஏற்கனவே சத்யராஜுடன் புதிய வானம் படத்தில் நடித்துள்ள ரூபிணி, பெருமாள்சாமி தனக்கு மீண்டும் பிரேக் ஏற்படுத்திக்கொடுக்கும் என்று பலமாக நம்புகிறார்.

இத்தனை காலம் எங்கே இருந்தீர்கள் என்று கேட்டால், ஆல்நர்நேட்டிவ் மெடிசின் என்கிற மருத்துவப் படிப்பு படித்துவிட்டுமருத்துவராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தேன். என்னைப் பார்த்தவர்கள் எல்லோரும் அழகாக இருக்கும் நீங்கள் ஏன் மீண்டும்நடிக்கக் கூடாது என்று வற்புறுத்தியதால் மீண்டும் வந்துவிட்டேன் என்கிறார்.

அப்படியா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil