»   »  கிளம்பிய இடத்திற்கே வந்துவிட்டேன்: ட்விட்டரில் ஃபீல் பண்ணிய த்ரிஷா

கிளம்பிய இடத்திற்கே வந்துவிட்டேன்: ட்விட்டரில் ஃபீல் பண்ணிய த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சாமி 2 படத்தின் ஹீரோயினாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

த்ரிஷா நடிக்க வந்த புதிதில் 2003ம் ஆண்டு வெளியான படம் சாமி. த்ரிஷா நடிக்க வந்து எந்த படமும் ஓடாத நிலையில் சாமி வெளியாகி ஹிட்டானது.

சாமி மட்டும் ஹிட்டாகாமல் இருந்தால் திரையுலகை விட்டு விலகிவிடலாம் என முடிவு செய்ததாக த்ரிஷா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

சாமி 2

சாமி 2

14 ஆண்டுகள் கழித்து சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார் ஹரி. ஹீரோ நிச்சயமாக விக்ரம் தான். ஹீரோயின் த்ரிஷாவுக்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்பட்டது.

மாமி இஸ் பேக்

சாமி 2 படத்தின் நாயகியாக த்ரிஷாவையே ஹரி தேர்வு செய்துள்ளார். இதனால் த்ரிஷா மகிழ்ச்சி அடைந்து கிளம்பிய இடத்திற்கே திரும்பி வந்துள்ளதாக ட்வீட்டியுள்ளார்.

விக்ரம்

என் முதல் சூப்பர் ஸ்டார் ஹீரோ விக்ரம் மற்றும் ஹரி சாருடன் மூன்றாவது முறை. தயாரிப்பு மிஸ்டர் ஷிபு தமீன் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் த்ரிஷா.

த்ரிஷா

த்ரிஷா

த்ரிஷா விக்ரமுடன் சேர்ந்து சாமி, பீமா ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஹரி இயக்கத்தில் சாமி, ஆறு ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் 3வது முறையாக அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற உள்ளார்.

English summary
Trisha is the leading lady of Vikram starrer Saamy 2 to be directed by Hari.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos