»   »  'எலி' வடிவேலுவுடன் நான்... ஏன்?.. சதா விளக்கம்

'எலி' வடிவேலுவுடன் நான்... ஏன்?.. சதா விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் வடிவேலு ஜோடியாக எலி படத்தில் நடிப்பதன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்துள்ளார் நடிகை சதா.

அஜீத், விக்ரம், ஜெயம் ரவி, மாதவன் என தமிழில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சதா. தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையாததால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் சதாவைப் பார்க்க முடியவில்லை.


Sada to stage a comeback

இந்நிலையில், தற்போது வடிவேலு ஜோடியாக எலி படத்தில் நடித்து வருகிறார் சதா. தெனாலிராமன் படத்தை யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார்.


வடிவேலு ஜோடியாக நடிப்பது குறித்து சதா கூறுகையில், ‘படத்தின் கதையும், புதுவிதமான எனது கதாபாத்திரமும் கவர்ந்ததால் இதில் நடிக்க சம்மதித்தேன்‘ எனத் தெரிவித்துள்ளார்.


1960களின் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அடுத்துள்ள பின்னி மில் வளாகத்தில் நடக்கிறது. இதற்காக ஜொலிக்கும் வீடு, பழமையான வீடு, வில்லனின் ரகசிய இருப்பிடம் என 15க்கும் மேற்பட்ட அரங்குகளை தோட்டா தரணி அமைத்திருக்கிறார். 15 நாட்களுக்கும் மேலாக மும்பை நடன கலைஞர்கள், நடன இயக்குனர் தாராவின் நடன அமைப்பில் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது.


ஏப்ரலில் படப்பிடிப்பு முடிந்து மே மாதத்தில் படம் திரைக்கு வர உள்ளது.

English summary
Sadha, who was last seen in 2011 Tamil film "Puli Vesham", is making a comeback of sorts to the industry with upcoming Tamil comedy "Eli", starring comedian Vadநடிகர் வடிவேலுவின் ஜோடியாக எலி படத்தில் நடித்துள்ளார் நடிகை சதா. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த சதா, ‘இப்படத்தின் கதையும், புதுவிதமான கதாபாத்திரமும் கவர்ந்ததால்’ எலியில் நடிக்க சம்மதித்தாராம்.ivelu in the lead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil