»   »  சதாவின் மாற்றம்!

சதாவின் மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சதா நடிக்கும் அந்நியன் படம் முடியப் போகிறது. இதைத் தவிர மாதவனுடன் ப்ரிய சகி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

ஹீரோ என்னை தொடக் கூடாது, கட்டிப் பிடிக்கக் கூடாது, முத்தமா நோ நோ என்று பலவித கட்டுப்பாடுகளை விதிப்பதால்சதாவின் காட்டில் அடை மழையாய் பெய்து வந்த வாய்ப்புக்கள் குறைய ஆரம்பித்துவிட்டன.

ஜெயம் படத்தில் போயா போயா மேனரிஸம் மூலம் அதிரடியாக தமிழர்களின் உள்ளங்களில் இடம் பிடித்தார் சதா.

படத்தின் பெரும் வெற்றியால் அவருக்கு வாய்ப்புக்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்ட, இந்த டிரஸ் போட மாட்டேன்,இந்த ஹீரோ கூட நடிக்க மாட்டேன், நோ- கிஸ் சீன், கவர்ச்சி காட்ட மாட்டேன் என பல கண்டிசன்கள் போட்டார்.

அத்தனைக்கும் தலையாட்டிய இயக்குனர்களுக்கு மட்டுமே சதாவின் கால்ஷீட் கிடைத்தது.

இந் நிலையில்தான் ஷங்கர் தனது அந்நியன் படத்திற்கு சதாவை புக் செய்தார். மற்றவர்களிடம் அலட்டினாலும் தன்னிடம்அடங்கித்தான் இருப்பார் என்று இயக்குனர் நினைத்ததற்கு மாறாக ஷங்கருக்கே டகாய்ச்சி காட்டத் தொடங்கினார் சதா.

வெறுத்துப் போன ஷங்கர், கொஞ்ச நாள் விட்டுப் பிடித்தார். சதா தொடர்ந்து முரண்டு பிடிக்கவே, படத்தை விட்டு தூக்கிவிடுவேன்என்று எச்சரித்ததோடு மாற்று ஹீரோயினையும் தேட ஆரம்பித்தார்.

தென்னகத்தின் மிகப் பெரிய டைரக்டர்களில் ஒருவரான ஷங்கரின் படத்தில் இருந்து பாதியில் நீக்கப்பட்டால் தகராறு பிடித்தவர்என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்று பயந்த சதா விட்டுக் கொடுத்து நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

தனது கட்டுப்பாடுகளை முடிந்தவரைத் தளர்த்திக் கொண்டு ஷங்கரின் விருப்பத்திற்கேற்ப தெறமை காட்டி வருகிறார் சதா.

இதே தளர்ச்சியை ப்ரிய சகி படத்துக்கும் எக்ஸ்டெண்ட் செய்திருக்கிறார். அதில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.இப்போதைய டிரண்டுக்கு ஏற்ப முட்டிக்கு மேல் ஏறிய டிரஸ்களில் வந்து ஆட வேண்டிய கட்டாயம். ஷங்கர் கொடுத்த சூடோஎன்னவோ, இந்தப் படத்தின் இயக்குனரிடம் மறுபேச்சே பேசாமல் சொன்ன மாதிரி தாரளமாகவே நடித்து வருகிறாராம் சதா.

இந் நிலையில் ஜெய் ஆகாசுக்கு ஜோடியாக தேஜா என்ற படத்தில் நிறைய கிளாமருடன் நடிக்கவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் தயாராகிறது. தெலுங்குக்கு நிறைய கிளாமர் தேவை என்பதை முதலிலேயேவிலாவாரியாக எடுத்துச் சொல்லித் தான் சதாவை புக் செய்திருக்கிறார்கள்.

தினந்தோறும் மும்பை இறக்குமதிகள் கோடம்பாக்கத்தையும் தெலுங்கு திரையுலகையும் திணறடித்து வருவதால் இனி தனதுகட்டுப்பாடு எல்லாம் எடுபடாது என்பதை சதாவும் புரிந்து கொண்டுவிட்டார். இதனால் அட்வான்ஸை மட்டும் வாங்கிக்கொண்ட சதா தனது கட்டுப்பாடுகள் குறித்து வாய் திறக்கவில்லையாம்.

இது குறித்து கோடம்பாக்கம் குருவிகளிடம் கேட்டால், சதா இப்போ பேமஸ் ஆன பிறகு தான் அப்படி நடிக்க மாட்டேன் இப்படிநடிக்க மாட்டேன் என்கிறார். ஆரம்ப காலத்தில் வாய்ப்பில்லாமல் இருந்தபோது மோனலிஸா என்ற கன்னட படத்தில் அவர்எப்படி நடித்தார் என்பதை முடிந்தால் போய்ப் பாருங்கள்.

அப்படியெல்லாம் நடித்துவிட்டு இப்போது மட்டும் ஓவர் வசனம் பேசுவதால் தான் இயக்குனர்கள் எரிச்சலாகிறார்கள் என்றனர்.

எப்படியோ, கொள்கைப் பிடிப்புடன் இருந்த ஒரு நடிகையை கிளாமர் ஏரியாக்குள் வளைத்துவிட்டது கோடம்பாக்கம்.

பி.கு: சதா ரவுண்டு கட்டித் திறமை காட்டிய மோனலிஸா படத்தை தமிழில் டப் செய்து வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறாராம்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil