»   »  அய்யங்கார் மாமியாக சதா

அய்யங்கார் மாமியாக சதா

Subscribe to Oneindia Tamil

அந்நியன் படத்தில் அய்யங்கார் வீட்டு மாமியாக நடிக்கிறார் நடிகை சதா

சதா சச்சரவு செய்தபடியே இருப்பவர் என்று கோடம்பாக்கத்தில் பெயர் எடுத்து இருப்பவர் சதா. தற்போதுஷங்கரின் இயக்கத்தில் அந்நியன் படத்தில் நடித்து வரும் சதாவிடம் அவர் மீது சொல்லப்படும் குறைகள் குறித்தும்அந்நியன் படம் குறித்தும் கேட்டபோது, அவர் கூறியதாவது:

சினிமா ஒரு கனவு தொழிற்சாலை. வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆடம்பரமாக, உல்லாசமாகத் தெரியும்.படித்துக் கொண்டிருந்தபோது, நானும் அப்படித் தான் நினைத்தேன். சினிமாக்காரர்கள் நிறைய பணம்சம்பாதிக்கிறார்கள், வசதியாக வாழ்கிறார்கள் என்றெல்லாம் நினைத்தேன்.

உள்ளே வந்து பார்த்த பிறகு தான் இந்த தொழிலில் உள்ள கஷ்ட நஷ்டங்கள், சிரமங்கள் தெரிய வந்தது. காலைபத்து மணிக்கு போய் விட்டு சாயங்காலம் 5 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுகிற ஆபீஸ் வேலை மாதிரி, சினிமாஎளிது இல்லை.

இங்கு நேரம் காலமே கிடையாது. இது ஒரு டீம் ஒர்க். கடினமாக உழைத் தால்தான் முன்னுக்கு வரமுடியும் என்றநிலை.

இப்போது, அந்நியன் படத்தில் எனக்கு அய்யங்கார் வீட்டு பெண் வேடம். கேரக்டரைப் பற்றி முழுவதும்சொன்னால் ஷங்கர் அடிக்க வருவார். ஒன்று மட்டும் சொல்கிறேன். அதிர்ஷ்டமுள்ள நடிகைகளுக்கு மாத்திரம் தான்இதுமாதிரி ஒரு கேரக்டர் கிடைக்கும்.

குடும்பப் பாங்கான கேரக்டர்களில் நடிப்பதையே நான் விரும்புகிறேன். அத்தகைய வேடங்கள் மட்டுமே என் முகஅமைப்புக்கு பொருந்தும். பக்கத்து வீட்டு பெண் என்று ரசிகர்கள் நினைக்கிற மாதிரி முகம் எனக்கு. எனவேஅத்தகைய வேடங்களிலேயே தொடர்ந்து நடிப்பேன்.

உடம்பை மூடி மறைத்துக்கொள்வதில்தான் உண்மையான அழகு இருக்கிறது. கவர்ச்சி என்பது, தற்காலிகம் தான்.கவர்ச்சியாக நடித்தால், சினிமாவில் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது. நான் கவர்ச்சியான பெண் என்றுபேசப்படுவதைவிட நல்ல நடிகை என்று பெயர் வாங்குவதையே விரும்புகிறேன்.

என்னிடம் எனக்குப் பிடித்தது கண்கள். வசீகரமான கண்கள் என்று எல்லோரும் என்னிடம் சொல்கிறார்கள்.

வேலையில் நான் ரொம்ப சின்சியராக இருப்பேன். முடிந்தவரை என் வேலையை சிறப்பாக செய்யவேண்டும்என்று நினைப்பேன். அதே நேரத்தில் நான் ஒரு சென்சிடிவ் டைப். சினிமாவில், பெண்கள் தைரியமாக இருக்கவேண்டும். ஆனால் நான், யாராவது கிண்டல் செய்தாலே அழுதுவிடும் டைப்.

சின்ன விஷயத்துக்கு கூட உணர்ச்சிவசப்படுவது எனது பெரிய பலவீனம். என்னைப் பற்றி வதந்திகளை என்னால்தாங்க முடிவதில்லை. இருப்பினும் வதந்திகளும், கிசுகிசுக்களும் சினிமாவில் சாதாரணம் என்பதைப் புரிந்துகொண்டுள்ளேன்.

ஸ்ரீகாந்த், மாதவன், விக்ரம் ஆகிய மூன்று பேருமே என்னிடம் இனிமையாகவும் கண்ணியமாகவும் பழகினார்கள்.எப்படி நடிப்பது உட்பட பல தொழில் நுணுக்கங்களை எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள். எனக்கு உற்சாகம்கொடுத்தார்கள்.

இதுவரை காதலித்தது இல்லை. நான் படித்தது, பெண்கள் கல்லூரியில். அதனால் காதல் வருவதற்கு வாய்ப்பேஇல்லாமல் போய்விட்டது என்ற சதா பேட்டியை முடிக்கும் முன்பு,

தமிழ் ரசிகர்கள் அன்பானவர்கள். தெலுங்கு ரசிகர்கள் நேரிலும், டெலிபோனிலும் தொல்லை கொடுக்கிறார்கள்.ஆனால் தமிழ் ரசிகர்கள் அப்படி அல்ல; டீசன்ட் ஆக நடந்து கொள்கிறார்கள் என்று ஐஸ் வைத்தார்.

அப்ப தெலுங்கு ரசிகர்கள் டீசன்ஸி தெரியாதவர்கள் என்கிறீர்களா, சதா?

நாராயணா! நாராயணா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil