»   »  ஜோதிகாவால் அப்செட்டான சதா

ஜோதிகாவால் அப்செட்டான சதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சந்திரமுகி படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை ஜோதிகா தட்டிப் பறித்துக்கொண்டதால் சதா அப்செட் ஆகியிருக்கிறார்.

சதா கன்னா பின்னாவென்று படங்களை ஒத்துக் கொள்ளும் ரகமில்லை. நல்ல கதை, தனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் அல்லது பெரியபேனர் என்றால் மட்டுமே படங்களை ஒத்துக் கொள்கிறார்.

இதனால்தான் எதிரி படத்திற்குப் பிறகு அவரைத் திரையில் காண முடியவில்லை. தற்போது விக்ரமுக்கு ஜோடியாக அந்நியன் படத்தில்நடித்து வரும் சதா, ப்ரியசகி படத்தில் மாதவனுடன் மீண்டும் ஜோடி சேருகிறார்.

முன்னதாக சந்திரமுகி படத்தில் சிம்ரன் கழட்டி விடப்பட்டதும், அந்த இடத்தைப் பிடிக்க சதா கடும் முயற்சி மேற்கொண்டார். ஆனால்அதிர்ஷ்டக் காற்று ஜோதிகா பக்கம் வீசியதால் அவருக்கு வாய்ப்பு போனது

.பிரபுவுக்கு ஜோடியாகத்தான் நடிக்க வேண்டும் என்றாலும், ரஜினி படம் என்பதால் பேர் கிடைக்கும் என்று நினைத்திருந்தார் சதா. இப்போதுஅது நிராசையாகிவிட்டது. இதனால் சதா கொஞ்சம் அப்செட்.

இருந்தாலும் அந்நியன் படம் நல்ல விதமாக வளர்வதால் அம்மணி கொஞ்சம் உற்சாகமடைந்துள்ளார்;.

முதல்வன், இந்தியன் படங்களைப் போல் இல்லாமல் அந்நியன் படத்தில் ஹீரோயினுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என்றுசொல்லும் சதா,

தமிழோ, தெலுங்கோ கதைக்குத் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பேன். அதேநேரத்தில் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்றஎண்ணம் எனக்கு இல்லை. எண்ணிக்கையைவிட தரம்தான் முக்கியம்.

ஒரே நாளில் டாப் ஹீரோயினாகி விட வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. குறைந்த படங்களில் நடித்தாலும் நல்ல நடிகை என்றபெயர் வாங்க வேண்டும்.

அதனால்தான் நல்ல படங்களை மட்டும் தேர்வு செய்து நடிக்கிறேன். இப்போது நான் நடிக்கும் பிரியசகி படம் யூத்புல்லான காதல் கதை.இந்தப் படத்தில் எனக்கு முக்கியத்துவம் அதிகம்.

அந்நியன் படமும் நன்றாக வந்திருக்கிறது. படத்திற்கு மொத்தம் 110 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளேன். ஷங்கரும், விக்ரமும் கடுமையாகஉழைக்கிறார்கள். இந்தப் படம் பெரிய ஹிட் ஆகும்.

காதல் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. அப்பா, அம்மா பார்த்து வைக்கும் பையனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்.திருமணத்திற்குப் பிறகு கட்டாயம் நடிக்க மாட்டேன் என்றார் சதா.

எப்போ கல்யாணம் என்றால் இப்போ என்ன அவசரம் என்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil