»   »  சதாவின் 'லவ் கேம்'

சதாவின் 'லவ் கேம்'

Subscribe to Oneindia Tamil


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய சினிமா ஒட்டுமொத்தமாக கதவை சாத்தி விட்டதால் இந்தியில் புகுந்துள்ளார் சதா. தான் நடித்துள்ள முதல் படமான 'லவ் கேம்' தனக்கு இந்தியில் நல்ல அறிமுகத்தைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் சதா.


சதாவைப் பொருத்தவரை அந்நியன் வரைக்கும் எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அந்நியன் வந்தால் ரேஞ்சே வேறு என்று சிலர் சொல்லியதைக் கேட்டு, வந்த வாய்ப்புகளை எல்லாம் தட்டிக் கழித்து வந்தார் சதா.

அந்நியன் வந்தது, சதா மார்க்கெட்டில் பெரிய துண்டைப் போட்டு விட்டு போய் விட்டது. அந்நியனுக்குப் பிறகு சினிமாவுக்கே அந்நியமாகிப் போனார் சதா.

அதன் பிறகு அவரைத் தேடி ரொம்ப அரிதாகவே வாய்ப்புகள் வந்தன. மாதவனோடு பிரியசகி படத்தில் கிளாமர் காட்டி நடித்துப் பார்த்தார். பிரயோஜனம் இல்லை. சமீபத்தில் வந்த உன்னாலே உன்னாலே படமும் சதாவுக்கு பெரிய பிரேக்கைக் கொடுக்கவில்லை.

தமிழைப் போலவே கன்னடம், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமா முழுவதிலும் சதாவின் ஆதிக்கம் இல்லாமல் போய் விட்டது. இதனால் வெறுத்துப் போன சதா இந்தியில் புகுந்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் சங்கீத் சிவன் இயக்கும் க்ளிக் என்ற படத்திலும், லவ் கேம் என்ற படத்திலும் நடித்து வருகிறாராம் சதா. அதிலும் லவ் கேம் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்.

லவ் கேம் படத்தில் எனது முழுத் திறமையையும் காட்டி, கொட்டி நடித்துள்ளேன். படம் வந்த பிறகு எனது ரேஞ்சே வேறு என்று கூறுகிறாராம் சதா.

அத்தோடு நில்லாமல், எனது திறமைக்கு பாலிவுட்தான் பொருத்தமானது. தென்னிந்திய சினிமாக்காரர்களுக்கு என்னை பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை.

தமிழில் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் சினிமாவில் தொடர்ந்து நீடிக்க முடியும். ஆனால் தொடர்ந்து வெற்றிப் படங்களையே எப்படிக் கொடுக்க முடியும்.

ஆனால் நான் தொடர்ந்து 2 வெற்றிப் படங்களில் நடித்தேன். அப்படியும் எனக்கு சரியான வாய்ப்பு வரவில்லை. அது எனது தவறா என்று ஆதங்கமாக கூறுகிறார் சதா.

போன இடத்திலாவது புகழைத் தேடிக் கொள்வாரா அல்லது போன வேகத்தில் திரும்பி வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Read more about: sadha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil