»   »  தெனாலியில் மிஸ்ஸானது... எலியில் கிடைத்து விட்டது: சதா உற்சாகம்

தெனாலியில் மிஸ்ஸானது... எலியில் கிடைத்து விட்டது: சதா உற்சாகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் வடிவேலுவுடன் தெனாலிராமன் படத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும், ஆனால் எலி படத்தின் கதை பிடித்ததால் அதில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை சதா.

தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ஜெயம் படத்தில் அறிமுகமானவர் நடிகை சதா. தமிழ், தெலுங்குப் பட உலகில் முன்னணி நாயகிகளுள் ஒருவராக இருந்த சதா, இந்தி, கன்னட மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

இடையில் சில காலம் தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்த சதா, தற்போது நடிகர் வடிவேலு ஜோடியாக எலி படத்தில் நடித்து வருகிறார்.

எலி பட அனுபவம் குறித்து சதா கூறுயதாவது :-

தெனாலி...

தெனாலி...

வடிவேலு தெனாலிராமன் படத்தில் நடித்த போது அவருடன் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் அப்போது அந்த படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை.

எலிக்கதை பிடித்தது...

எலிக்கதை பிடித்தது...

எலி படத்தின் கதையும் எனது கேரக்டரும் மிகவும் பிடித்தது. எனவே நடிக்கிறேன்.

ஆர்வம் இல்லை...

ஆர்வம் இல்லை...

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டரில் நடிக்க நடிகைகள் பலர் விரும்புகிறார்கள். எனக்கு அப்படி நடிப்பதில் ஆர்வம் கிடையாது.

காரணம் இது தான்...

காரணம் இது தான்...

அது போன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கும்போது படத்தின் மொத்த சுமையையும் கதாநாயகி தான் சுமக்க வேண்டும்.

முத்திரை குத்தி விடுவார்கள்...

முத்திரை குத்தி விடுவார்கள்...

படம் ஒருவேளை தோல்வி அடைந்தால் அந்த நடிகையை அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைத்து விடுவார்கள். எனவேதான் அது போன்ற படங்களில் நான் நடிப்பது இல்லை' என இவ்வாறு சதா தெரிவித்துள்ளார்.

English summary
At a time when many actresses want to do heroine-centric projects, Sadha is against it. In fact, the 'Anniyan' and 'Jayam' lead lady says she has turned down many such offers. And she has a reason too.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil