»   »  தேடி வந்தபோது மறுத்த சாய் பல்லவிக்கு மீண்டும் வாய்ப்புகள் வருமா?

தேடி வந்தபோது மறுத்த சாய் பல்லவிக்கு மீண்டும் வாய்ப்புகள் வருமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ப்ரேமம் படத்திற்கு பிறகு தேடி வந்த தமிழ் பட வாய்ப்புகளை மறுத்த சாய் பல்லவி மீண்டும் கரு படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

ப்ரேமம் படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் ஃபேவரிட் நடிகையானவர் சாய்பல்லவி. கோவையை சேர்ந்த சாய்பல்லவிக்கு ப்ரேமம் படத்துக்கு பிறகு பல வாய்ப்புகள் தேடி வந்தன. முக்கியமாக முன்னணி இயக்குநர்கள் மணிரத்னம், கவுதம்மேனன், முன்னணி ஹீரோக்கள் விக்ரம், சிம்பு ஆகியோர் படங்களில் கேட்டபோது கூட முடியாது என்று மறுத்துவிட்டு டாக்டர் படிப்பை தொடர சென்றுவிட்டார் சாய்பல்லவி.

Sai Pallavi seeks new chances in Tamil

இப்போது இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகும் கரு என்ற ஹீரோயின் ஓரியண்டட் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்த படத்துக்கு பின் தமிழில் தொடர்ந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். ஆனால் முன்பு சாய்பல்லவியால் மறுக்கப்பட்டவர்கள் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுப்பார்களா என்பது சந்தேகம் தான்!

English summary
Sai Pallavi has entered Kollywood by Karu movie and looking new opportunies to continue in Tamil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil