கன்னடத்தில் அறிமுகமாகும் நடிகை சாய் பல்லவி.. ஹீரோ யார் தெரியுமா!

சென்னை : ஃபிடா வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் சேகர் கம்முலா உடன் இணைந்து லவ் ஸ்டோரி படத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார் இதன் ரிலீஸ் தேதி செப்டம்பர் 10 என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழிலில் என் ஜி கே மற்றும் மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சாய்பல்லவி தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார்.

இதுவரை மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் மட்டுமே நடித்து வந்த சாய்பல்லவி இப்போது முதல் முறையாக தேசிய விருது பெற்ற கன்னட இயக்குனரின் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கிளாமருக்கு முக்கியத்துவம்

கிளாமருக்கு முக்கியத்துவம்

தென்னிந்திய சினிமாவில் அசுர வேகத்தில் வளர்ந்து வருபவர் நடிகை சாய் பல்லவி. சிறு சிறு கதாபாத்திரங்களில் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று திறமையை வளர்த்துக் கொண்ட இவர் இப்பொழுது அனைவரும் விரும்பும் மிகச் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார். தேவை இல்லாத கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இவர் நடித்து வரும் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வருவதனால் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தமிழில் வெளியான கஸ்தூரி மான் மற்றும் தாம் தூம் உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் வந்து சென்ற சாய்பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் மூலம் முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார். இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. ஒருவரின் வாழ்க்கையில் மூன்று கட்டங்களாக நடக்கும் காதலை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மலையாள ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். இந்த திரைப்படம் சென்சேஷனல் வெற்றி பெற்று தெலுங்கு மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. முதல் படத்திலேயே மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியதோடு நடனத்திலும் தான் ஒரு திறமைசாலி என்பதை நிரூபித்த சாய்பல்லவி அடுத்தடுத்த மலையாள படங்களில் ஒப்பந்தமானார்.

ஃபிடா கூட்டணி

ஃபிடா கூட்டணி

இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி இயக்குனராக உள்ள சேகர் கம்முலா இயக்கத்தில் ஃபிடா என்ற திரைப்படத்தில் நடித்த தெலுங்கு சினிமாவில் அறிமுகமான சாய்பல்லவிக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தெலுங்கில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. மிடில் கிளாஸ் அப்பாயி,தியா, பாடி பாடி லேசே மனசு என தெலுங்கில் சாய் பல்லவிக்கு வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து இப்பொழுது முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார். நான்கு வருடங்களுக்குப் பிறகு ஃபிடா கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ் பெண்ணாக இருந்தாலும் தமிழ் சினிமாவிற்கு மிகத் தாமதமாகவே அறிமுகமான சாய் பல்லவி முதல் படத்திலேயே தனுஷுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தனுஷ் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான மாரி தாறுமாறான வெற்றியைப் பெற்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக மாரி 2 வெளியானது. இதில் அராத்து ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் செம துடிப்புடன் சாய்பல்லவி நடித்து பாராட்டுகளை பெற்றதோடு அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடலுக்கு தனுஷுக்கு இணையாக போட்டி போட்டு ஆடி ஓவர் நைட்டில் இந்திய அளவில் பிரபலமானார். ரவுடி பேபி பாடல் இன்றளவும் சமூக வலைதளங்களில் ஹிட்டடித்து வரும் நிலையில் ரசிகர்கள் இவரை ரவுடி பேபி என செல்லமாகவும் அழைத்து வருகின்றனர். மாரி 2 எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது. மாரி 2 அடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக என் ஜி கே படத்தில் இணைந்து மிக வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

 லவ் ஸ்டோரி ரிலீஸ் தேதி

லவ் ஸ்டோரி ரிலீஸ் தேதி

தமிழில் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் சாய்பல்லவி நடித்து வந்தாலும் மற்ற மொழிகளை விடவும் தெலுங்கில் இவருக்கு அதிக அளவிலான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் ஃபிடாவுக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் சேகர் கம்முலா உடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சாய்பல்லவிக்கு ஜோடியாக நடிகர் நாக சைத்தன்யா நடித்திருக்க பல முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்ட பின் கொரோனா காரணமாக தேதிகள் தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டே இருக்க ஒரு வழியாக லவ் ஸ்டோரி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இப்பொழுது அறிவித்துள்ளது. அதன்படி லவ் ஸ்டோரி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதனால் சாய்பல்லவியின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். காதல் படங்களை இயக்குவதில் வல்லவரான சேகர் கம்முலா லவ் ஸ்டோரி படத்தையும் திகட்டாத காதல் படமாக இயக்கி உள்ளார். அடுத்து தனுஷை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் படத்தை இயக்க இருப்பது உறுதியாகி உள்ளது.

Recommended Video

மணிரத்னம் எனக்கு தெரியாமலேயே SHOOT பண்ணுவார் | CLOSE CALL WITH NIROSHA PART-03 | FILMIBEAT TAMIL
 கன்னட சினிமாவில் அறிமுகம்

கன்னட சினிமாவில் அறிமுகம்

ராணாவுடன் இணைந்து விராட பருவம் மற்றும் நானியின் ஷ்யாம் சிங்கா ராய் ஆகிய படங்களில் நடித்து வரும் சாய்பல்லவி இதுவரை தமிழ், தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமே நடித்து வந்த நிலையில் இப்போது முதன்முறையாக கன்னட சினிமாவிலும் அறிமுகமாக உள்ளார். பிரபல தேசிய விருது பெற்ற கன்னட இயக்குனர் மன்சூர் இயக்கத்தில் சாய்பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் மன்சூர் சமீபத்தில் இயக்குனர் சாய் பல்லவியிடம் கதையை கூறியதாகவும் அது அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. கன்னடத்தில் பிரபலமாக உள்ள நடிகர் ஒருவர் இதில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தெரிகிறது . இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X