»   »  இது என்ன 'பிரேமம்' மலர் டீச்சர் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க!

இது என்ன 'பிரேமம்' மலர் டீச்சர் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரேமம் புகழ் சாய் பல்லவி திருமணமே செய்து கொள்ளப் போவது இல்லை என தெரிவித்துள்ளார்.

மலையாள படமான பிரேமத்தில் மலர் டீச்சராக நடித்து புகழ் பெற்றவர் நம்ம கோத்தகரி பொண்ணு சாய் பல்லவி. தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவர் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

திருமணம்

திருமணம்

உங்களுடையது காதல் திருமணமா இல்லை பெற்றோர் ஏற்பாடு செய்வதா என்று சாய் பல்லவியிடம் ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு அவர் கூறுகையில், திருமணம் செய்து கொள்ளப் போவது இல்லை. ஏனென்றால் என் பெற்றோரை எப்பொழுதும் கவனித்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

பாடல்

பாடல்

தற்போது உங்களுக்கு பிடித்த பாடல் என்ற கேள்விக்கு பல்லவி கூறுகையில், நீவே(ஆல்பம்) மற்றும் ரெமோ நீ காதலன் என்றார்.

காக்க காக்க

காக்க காக்க

சூர்யா நடித்த படங்களில் உங்களுக்கு எது பிடிக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், காக்க காக்க என பதில் அளித்தார்.

டாக்டர்

டாக்டர்

நடிகை, டான்ஸர், டாக்டர். இதில் பிடித்தது எது என்று கேட்டதற்கு சாய் பல்லவி கூறுகையில், எனக்கு தெரியவில்லை. ஆனால் நோயாளிகள் முகத்தில் சிரிப்பை வரவழைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

சைவம்

சைவம்

உங்களுக்கு சிக்கன் பிரியாணி பிடிக்குமா அல்லது மட்டன் பிரியாணி பிடிக்குமா என்று ஒரு ரசிகர் கேட்டார். பிரியாணியா நான் சைவம் என்றார் சாய் பல்லவி.

English summary
Premam fame Sai Pallavi said that she doesn't want to get married as she wants to take care of her parents all the time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil