»   »  சீனியர் நடிகரிடம் 'ஐ லவ் யூ' சொல்லத் துடிக்கும் மலர் டீச்சர்

சீனியர் நடிகரிடம் 'ஐ லவ் யூ' சொல்லத் துடிக்கும் மலர் டீச்சர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரேமம் மலர் டீச்சருக்கு சூர்யாவை பார்த்து ஐ லவ் யூ என்று சொல்ல ஆசையாக உள்ளதாம்.

கோத்தகிரியில் பிறந்து கோவையில் வளர்ந்த நம் தமிழ் பொண்ணு சாய் பல்லவியை நமக்கு எல்லாம் அடையாளம் காட்டியது மலையாள படமான பிரேமம் தான். அவர் தாம் தூம் தமிழ் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் என்பது பலருக்கும் தெரியாது.

பிரேமம் படம் வந்ததில் இருந்து தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் மலர் டீச்சர், மலர் டீச்சர் என்றே கூறி வருகிறார்கள்.

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன்

பிரேமம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்கள். ஸ்ருதி ஹாஸன் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நம்ம சாய் பல்லவியை மலர் டீச்சராக பார்த்த ரசிகர்களால் ஸ்ருதியை அந்த கதாபாத்திரத்தில் பார்க்க முடியாமல் அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சூர்யா

சூர்யா

இப்படி ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட சாய் பல்லவிக்கு சூர்யா என்றால் உயிராம். நான் சூர்யாவின் தீவிர ரசிகையாக்கும் என்று பெருமையாக சொல்கிறார்.

ஐ லவ் யூ

ஐ லவ் யூ

சூர்யாவுடன் ஒரு படத்திலாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது பல்லவிக்கு. ஆனால் அந்த ஆசை நிறைவேறினாலும் சரி, நிறைவேறாவிட்டாலும் சரி சூர்யாவை ஒரேயொரு முறை நேரில் பார்த்து ஐ லவ் யூ என்று சொல்ல வேண்டுமாம்.

மணிரத்னம்

மணிரத்னம்

தமிழில் மலர் டீச்சருக்கு பிடித்த படம் மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டாலாம். டாக்டர் படிப்பு படித்து முடித்துள்ள சாய் பல்லவி தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படங்களில் நடித்த வருகிறார்.

English summary
Sai Pallavi who is an ardent fan of actor Suriya wants to meet him and say I Love You.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil