»   »  டிசம்பரில் 'அம்மா'வாகப் போகும் கரீனா கபூர்!

டிசம்பரில் 'அம்மா'வாகப் போகும் கரீனா கபூர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: டிசம்பர் மாதம் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக பாலிவுட் நடிகர் சைப் அலிகான் தெரிவித்திருக்கிறார்.

பாலிவுட் நடிகர் சைப் அலிகான்- கரீனா கபூர் திருமணம் கடந்த 2012 ம் ஆண்டு நடந்தது. திருமணத்திற்குப் பின்னும் கரீனா தனது நடிப்பைத் தொடர்ந்து வருகிறார்.

திருமணமாகி 3 வருடங்கள் கடந்தும் கரீனா அம்மாவாகும் வாய்ப்பைத் தள்ளிப்போட்டுகொண்டே வந்தார். இதனால் கரீனா எப்போது குழந்தை பெற்றுக் கொள்வார்? என்ற கேள்வி அடிக்கடி அவரிடம் எழுப்பப்பட்டது.

Saif Ali Khan's Confirmed Kareena Pregnancy

ஆனால் கரீனா இது குறித்து எழுந்த கேள்விகளை தொடர்ந்து தவிர்த்து வந்தார். இந்நிலையில் நடிகர் சைப் அலிகான் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் சமீபத்திய பேட்டியில் ''டிசம்பர் மாதம் எங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறோம். எங்களை வாழ்த்திய நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் இதுநாள்வரை பொறுமையாக இருந்த ஊடகங்களின் யூகம் மற்றும் பொறுமைகளுக்கும் நன்றி'' என்று கூறியிருக்கிறார். சைப் அலிகானுக்கு முதல் மனைவி மூலம் சாரா(23) என்ற மகளும், இப்ராஹிம் (15) என்ற மகனும் இருப்பது குறிப்பிடத்தகது.

English summary
Saif Ali Khan's Confirmed Kareena Pregnancy. He is Expecting his First child in December.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil