»   »  விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' நாயகிக்கு விரைவில் டும் டும் டும்!

விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' நாயகிக்கு விரைவில் டும் டும் டும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சைத்தான் பட நாயகி அலிஷா அப்துல்லா- நவீன் தேவன்ராஜ் நிச்சயதார்த்தம் உறவினர், நண்பர்கள் மத்தியில் விமரிசையாக நடைபெற்றது.

இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் அலிஷா அப்துல்லா. பைக் ரேஸில் புகழ்பெற்ற அலிஷா இரும்புக் குதிரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.


Saithan Actress Alisha Abdullah Engagement

தற்போது விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சாப்ட்வேர் என்ஜீனியராக விஜய் ஆண்டனி நடித்து வரும் இப்படம் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது.


இந்நிலையில் கடந்த திங்களன்று அலிஷா- நவீன் தேவன்ராஜ் நிச்சயதார்த்தம் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் விமரிசையாக நடைபெற்றது.


இதில் அலிஷாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு அளிஷாவை வாழ்த்தினர். அலிஷா- நவீன் திருமணம் அடுத்த ஆண்டு ஜனவரி 18 ம் தேதி இந்தோனேசியாவில் நடைபெறுகிறது.


பைக் ரேஸைத் தொடர்ந்து தற்போது கார் ரேஸில் அலிஷா கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். திருமணத்திற்குப் பின் நடிப்பாரா? இல்லை ரேஸில் மட்டும் கவனம் செலுத்துவாரா? என்பது தெரியவில்லை.

English summary
Saithan Actress Alisha Abdullah Engagement held in Chennai on june 13th.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil